நான் விலகிக்கிறேன்…! விக்ரம் கோபம்… விஜய் மில்டன் அதிர்ச்சி

பணம் என்றால் பிணமே வாயை திறக்கும் காலமிது. அப்படியிருக்க, சமானியர்கள் திறக்க மாட்டார்களா என்ன? விக்ரம் ஹீரோவாக நடிக்க, கோலிசோடா வெற்றிக்கு பின் விஜய் மில்டன் ஒரு படத்தை இயக்கப் போகிறார் அல்லவா? அந்த படத்தை 24 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறதாம் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம். இதைதான் தட்டிக் கொண்டு போக முடிவெடுத்தாராம் லிங்குசாமி. அவங்க 24 ன்னா நான் 28 தர்றேன். எப்பூடி… என்று லிங்குசாமி விஜய் மில்டனிடம் நேரடியாக வியாபாரம் பேச, பொங்கி வந்தது சந்தோஷம்.

விஜய் மில்டன் முகத்தில் கோலி சோடா தெளித்தாக வேண்டிய அளவுக்கு அந்த சந்தோஷம் அவரை சாய்த்தேவிட்டதாம். நாலு கோடி எக்ஸ்ட்ரா வருகிறது என்றால் சும்மாவா? மெல்ல இந்த விஷயத்தை அவர் விக்ரமிடம் சொல்ல, அங்குதான் வந்தது ஆபத்து. செம ஆத்திரம் வந்ததாம் விக்ரமுக்கு. ‘இந்த படத்தை லிங்குசாமிக்கு விற்கப் போறீங்களா? அப்படின்னா நான் விலகிக்கிறேன் என்றாராம் கோபத்தோடு. படத்திற்கு பத்து எண்ணுறதுக்குள்ளே என்று பெயர் வைத்திருக்கிறார்கள். விக்ரமின் ஆத்திரத்தை பார்த்தால் எட்டு எண்ணுறதுக்குள்ளே எஸ்கேப் ஆகிவிடுவார் போலிருந்ததாம் அவரது கோபம்.

விக்ரமுக்கும் லிங்குவுக்கும் நடுவே அப்படியென்ன பிரச்சனை என்பதை அறியாத மில்டன், ஐயய்யோ… நீங்கதான் மெயின். மற்றதெல்லாம் அப்புறம்தான் என்று சமாதானப்படுத்தியதாக கேள்வி.

எலியை மடக்க கழுகு… கழுகை மடக்க வேடன்… இப்படிதான் போகுது வன வாழ்க்கையிலிருந்து ஜன வாழ்க்கை வரைக்கும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இசைய தளபதியா? பட்டமே வேணாம்… அலறும் விஜய் ஆன்ட்டனி!

நன்றாகவே தேறிவிட்டார் விஜய் ஆன்ட்டனி. ‘இந்த படத்திலேயே உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன?’ என்ற கேள்விக்கு ‘இந்த படத்திலேயே எனக்கு பிடிச்சது ஹீரோயினும் ஒரு சின்ன கேரக்டரில்...

Close