பத்து எண்ணுறதுக்குள்ள பக்கத்து சீட்டுக்கு தாவலாமா? சிக்குனாரு விக்ரம்!

ஐ படத்திற்காக அத்தனை வருஷம் வேறு படங்களை ஒப்புக் கொள்ளாத விக்ரம், அவிழ்த்துவிட்ட கன்னுக்குட்டியாகிவிட்டார் ஐ ரிலீசுக்கு பிறகு. ஒரு படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்திற்கு போக வேண்டும் என்கிற அவரது முந்தைய கொள்கைக்கு அவரே மூச்சு முட்ட சங்கு ஊதினாரல்லவா? அந்த ஒரு தவறுக்காகவே அவரது காதில் பீப்ப்ப்ப்ப்ப்ப்… என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது டார்ச்சர். இதிலிருந்து தப்பவே முடியாதபடிக்கு தலையை பிய்த்துக் கொள்கிறாராம் அவர்.

அரிமா நம்பி பட இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார் அவர். படப்பிடிப்புக்கு கிளம்புகிற நேரத்தில்தான், ‘சார்… பத்து எண்ணுறதுக்குள்ள படம் இன்னும் முடியல. நீங்க பாட்டுக்கு போயிட்டா எங்க நிலைமை என்னாவறது?’ என்றார்களாம் இவர்கள். ஆனந்த் சங்கர் படத்திற்காக தலைமுடி, தாடியெல்லாம் விட்டிருந்த விக்ரம், நான் உங்க படத்துக்கு வரணும்னா கெட்டப் பிரச்சனை இருக்கு. இப்ப வளர்த்து வச்ச முடியையெல்லாம் வழிச்சு தள்ளணும். அப்புறம் அது வளர இன்னும் ரெண்டு மாசம் ஆவும். நான் என்ன பண்றது… என்று சொல்ல, எங்களுக்கு படம் முடிக்கறதுதான் பெரிய பிரச்சனை. அதுக்கு நீங்களே குறுக்கே நின்னா எப்படி என்று இவர்கள் சதாய்க்க… கண்ணில் பூச்சி பறக்கிறதாம் விக்ரமுக்கு.

ஆனந்த் சங்கர் படத்தின் முதல் ஷெட்யூலை முடிச்சுட்டு வர்றேன் என்று விக்ரம் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமலே பத்து எண்ணுறதுக்குள்ள படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டார்கள். அதாவது அக்டோபர் 21 ரிலீஸ் என்று. தன் படம் ரிலீஸ் ஆகிறது என்கிற செய்தியை கேட்கிற எந்த ஹீரோ முகத்திலும் புன்னகைதானே வரும்? விக்ரம் முகத்தில் தார் வழிகிறதாம்.

வழியேயில்ல. துடைச்சு போட்டுட்டு நடிச்சுர வேண்டியதுதான்!

Read previous post:
நிஜமாகவே கிழிந்த தாரை தப்பட்டை?! சசிகுமார், பாலா நடத்தும் பிப்டி பிப்டி ஆட்டம்!

எந்நேரத்தில் ‘தாரை தப்பட்டை’ என்று பெயர் வைத்தார்களோ? மாதங்கள் உருள உருள மத்தளத்தின் தோல் பிய்ஞ்சுரும் போலிருக்கே என்று கவலைக்கு ஆளாகிவிட்டாராம் சசிகுமார். சுமார் ஏழு கோடி...

Close