கலிபோர்னியாவுக்கு வாங்க… விக்ரமுக்கு ஆர்னால்டு அழைப்பு?
ஐ- வந்த பின் விக்ரமின் வெற்றிக்கொடி ஆர்னால்டு வீட்டுக்கு பக்கத்திலேயே பறக்குதா இல்லையா பார் என்று அவரது ரசிகர்கள் அலகு குத்தி காவடி எடுத்து வருகிறார்கள். தன் உழைப்பை அப்படியே கொட்டி கொட்டி அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் அவரும்! ரஜினியிலிருந்து ராசாயா வரைக்கும் விக்ரமின் கெட்டப்பை பார்த்து மிரண்டு போய் பாராட்டுகிறார்கள். எல்லாம் சரி… சென்னை வரைக்கும் வந்த ஹாலிவுட் ஹீரோ அர்னால்டு ஸ்வாஸ்நெகருடன் ஒரு போட்டோ கூட எடுக்க முடியவில்லையே அவரால்?
இந்த கவலை அவருக்கும் இருந்ததாம். இருந்தாலும் வந்தவருக்கு நன்றி சொல்வது கடமையாச்சே? ஒரு அழகான கடிதம் எழுதி அர்னால்டுக்கு அனுப்பி வைத்தாராம். அதில் ‘சென்னை வரைக்கும் வந்த உங்களுடன் ஒரு போட்டோ கூட எடுக்க முடியலையே’ என்று இவர் கவலைப்பட, லெட்டர் போன வேகத்திலேயே ரிப்ளை வந்ததாம் விக்ரமுக்கு.
‘அதுக்கென்ன? எப்ப கலிபோர்னியா வந்தாலும் என் வீட்டுக்கு வாங்க. உங்களுக்காக என் கதவு திறந்தேயிருக்கு’ என்று அர்னால்டு எழுதி அனுப்ப, உற்சாகமாகியிருக்கிறார் விக்ரம். ஒரு படத்தில் உழைப்பை கொட்டி முடித்து அந்த படம் வெளியானதும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள குடும்பத்தோடு வெளிநாடு பறக்கிற நடிகர்கள் லிஸ்டில் விக்ரமும் இருப்பதால், இந்த முறை அவரது ட்ரிப் கலிபோர்னியாவை நோக்கி இருந்தால் அதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.