மலேசியாவில் விக்ரம்
நட்சத்திர சரவெடி, இந்தியாவில் முன்னணி ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான “எபிக் ஈவண்ட்ஸ்” தற்போது “விசிட் மலேசியா 2014” மற்றும் “மை ஈவண்ட்ஸ் – மலேசியா” உடன் இணைந்து வரும் அக்டோபர் 4ம் தேதி (04.10.2014) அன்று, சரியாக மாலை 07.30 மணியளவில்…கோலாலம்பூர் புகிட் ஜலீல் -ல் அமைந்துள்ள.. புத்ரா அரங்கத்தில் மிகபிரம்மாண்டமாக நிகழ்த்தவிருக்கிறது!!!
திரு “சியான் விக்ரம்” பிரம்மாண்ட இயக்குனர் திரு.ஷங்கர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் *ஐ* படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக கலந்துகொள்வது நமது நட்சத்திர சரவெடி 2014-ன் கூடுதல் சிறப்பு!
நட்சத்திர சரவெடி-2014 நிகழ்வின் மிகமுக்கிய அம்சம். நமது பிரபலமான திரு *சியான்* விக்ரம் அவர்கள் சிலவருட இடைவெளிக்குப்பிறகு நம் மலேசியாவில் கலந்துகொள்ளும்… மிகமுக்கியமான நிகழ்வு ஆகும்!
மேலும் இந்நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா ஜெர்மையி, ஸ்ரேயா, நந்திதா, ரம்யா நம்பீசன், சுஜா வாருணி மற்றும் இவர்களுடன் பிரபல பாடகர்கள் சுசித்ரா, மனோ, ஹரிசரண், மலேசிய வாசுதேவன் புதல்வி பிரஷாந்தினி, மற்றும் “ஊதாகலரு ரிப்பன்” புகழ் ஹரிகரசுதன் ஆகியோர் பங்குபெறுவது சிறப்பாகும்!
நட்சத்திர சரவெடி-2014 மேடையை தங்களது மிமிக்ரியாலும், நகைச்சுவையாலும் அதிரவைக்க வருகிறார்கள் பிரபலமான ரோபோ சங்கர், திண்டுக்கல் சரவணன், மதுரை முத்து ஆகியோர்!