கமல் சொன்னார் ‘நோ…’ ரஜினிக்கு வில்லன் ஆகிறார் விக்ரம்!

வதந்தியா, புரளியா, நிஜமா, பொய்யா? என்று தமிழகத்தை ஒரு சுற்று சுற்றி ஓய்ந்துவிட்டது அந்த செய்தி. ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை ஷங்கர் இயக்குகிறார். அதை பிரபல நிறுவனமான லைக்கா தயாரிக்கிறது. பட்ஜெட் சுமார் 300 கோடி. அதில்தான் கமல் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார். இப்படியொரு செய்தி வெளிவந்ததும் போதும்… ஆழ்வார்பேட்டை வீட்டை சுற்றி அதிரடிப்படை வீரர்கள் மாதிரி குவிந்துவிட்டது மீடியா. அங்கிருந்து துரும்பு கூட வெளிப்படாது என்பது தெரிந்தும், எப்படியாவது ஸ்கூப் நியூசை தட்டிவிட வேண்டும் என்கிற அவர்களின் ஆர்வத்தில், ஒரு ஆஃப் பாயில் போட்டுவிட்டது அடுத்தடுத்து வரும் தகவல்கள்.

முதலில் வில்லனாக நடிக்க லேசாக இசைவு தெரிவித்த கமல், அதற்கப்புறம் உஷாராகிவிட்டாராம். ஒரேயடிகயாக முடியாது என்று மறுத்துவிட்டாராம். அதற்கப்புறம் வேறு வழியில்லாமல் தமிழில் மார்க்கெட்டில் முக்கிய இடத்திலிருக்கும் ஹீரோவை ட்ரை பண்ணலாம் என்று நினைத்தாராம் ஷங்கர். விக்ரமுடன் ஷங்கரின் தரப்பிலிருந்து ஒருவர் சந்திக்க போனார். பேச்சு வார்த்தையின் முடிவில், விக்ரம் யெஸ் சொல்ல, உடனடியாக தகவல் ஷங்கருக்கு பறந்திருக்கிறது.

இருந்தாலும் இந்த சந்திப்பையும் ஷங்கர் படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்கப் போகிற தகவலையும் பற்றி கேட்டால், விக்ரம் தரப்பு வாயை மூடி பேசவும் ஆகிவிடுவதால், சினிமா ஏரியா ஆர்வலர்கள் அடுத்தடுத்த உறுதியான செய்திக்காக காத்திருக்கிறார்கள். சுமார் மூன்று வருடங்கள் கிடப்பிலேயே கிடந்த விக்ரம், விட்ட காசையெல்லாம் எப்படியாவது சுருட்டிவிட வேண்டும் என்று நினைப்பதால், இந்த வருடத்திலேயே பல படங்களில் சைன் பண்ண துடித்துக் கொண்டிருக்கிறார். வில்லன் வேஷம் என்ன? வேறு ஏதாவது துண்டு துக்கடா வேஷம் கொடுத்தாலும் அவர் தயார்தான் போலிருக்கிறது!

ஏனென்றால் இது ஷங்கர் ரஜினி படமாச்சே!

Read previous post:
செம்மர கடத்தல் வழக்கில் சரவணன் கைதாம்… வதந்தியை கிளப்பியவன் எவண்டா?

தமிழகத்தையும் ஆந்திராவையும் உலுக்கி வரும் அண்மைகால அதிர்ச்சி 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்தான். செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக சுட்டுக்கொல்லப்பட்ட அந்த தமிழர்கள் அனைவரும் அப்பாவிகள் என்றும்,...

Close