தாத்தா சிவாஜியின் களங்கத்தை துடைத்த பேரன் விக்ரம்பிரபு?

சினிமாவில் கம்பு சண்டையெல்லாம் கரையேறி அநேக வருஷமாச்சு. எம்ஜிஆர் கம்பு சுத்துற அழகே தனி என்று கும்பல் கும்பலாக தியேட்டருக்கு போன காலம் ஒன்றுண்டு. எங்க தலைவர் உங்க தலைவரால கம்பு சுத்த முடியுமா என்று கேட்டு கேட்டே சிவாஜி ரசிகர்களை சித்தம் கலங்க வைத்தார்கள் எம்ஜிஆர் ரசிகர்கள். அப்படியே காலம் கொஞ்சம் மாறி, ராமராஜன் அந்த வேலையை செய்தார். நாற்பது கம்புகள் அவரது தலைக்கு மேலே பிரஷ்ஷர் கொடுக்க, கண்கள் சிவந்து அதன் காரணமாக உதடும் சிவந்து கடைசியில் மொத்த கம்பையும் நெம்பியெறிந்து முண்டா தட்டும் ராமராஜன் அழகும் ஒழிந்து போனது.

இப்போதெல்லாம் ரோப்பை கட்டி அந்தரத்தில் பறக்கும் ஹீரோக்கள், தாடை பிய்கிற அளவுக்கு கிக் கொடுப்பதுதான் ஸ்டைலே. இந்த காலத்தில் மீண்டும் கம்பு சண்டையை கொண்டு வந்து சிவாஜியின் களங்கத்தை அவரது பேரனை விட்டு துடைக்க வைத்திருக்கிறார் எழில். என்னவாம்?

விக்ரம் பிரபு நடிக்கும் வெள்ளக்கார துரை படத்தில் விக்ரம் பிரபு பிரமாதமாக ஒரு கம்பு சண்டை போட்டிருக்கிறார். ஒரு நாள் எழிலிடம் பேசிக் கொண்டிருந்த பிரபு, தன் மகன் விக்ரம்பிரபு பற்றி பேசும்போது, அவனுக்கு நல்லா கம்பு சுற்ற தெரியும் என்று சொல்ல, குறிப்பால் உணர்ந்து கொண்டார் எழில்.

படத்தில் வரும் சண்டைக்காட்சியை கம்பு சண்டை காட்சியாக மாற்றினாராம் அவர். வெள்ளைக்கார துரையில் வேறென்ன ஸ்பெஷல். அறிமுகமான படத்திலிருந்தே சீரியஸ் முகம் காட்டிக் கொண்டிருந்த விக்ரம்பிரபு முதன் முறையாக முழு நீள காமெடி ட்ரை பண்ணியிருக்கிறார். அதான்… கம்பு சண்டை போடுகிறார்னு சொல்லும்போதே புரிஞ்சு போச்சே. அப்புறம் தனியா வேற சொல்லணுமா?

Read previous post:
Kamal Haasan Birthday wishes to Rajinikanth

https://www.youtube.com/watch?v=aQXNiISGNvc

Close