சிவகார்த்திகேயனும் அனிருத்தும் ஃபிரண்ட்ஸ்… அதனாலதான்! விம்மி புடைக்கும் விமல்!

நம்புறவனுக்கு நாராயணன், நம்பாதவனுக்கு வெறும் நரேன்…. இப்படி சாமியவே சந்தடி சாக்குல ஷார்ட் பார்ம் ஆக்குற ஊர்ல, நட்பு இன்னும் அப்படியே சுருங்காம இருக்குன்னா அதுக்கே தனியா ஒரு நன்றி கார்டு போட்ற வேண்டியதுதான். விஷயத்தை புரிஞ்சுகிட்டா ‘வெல்டன்’னு பாராட்டுவீங்க மக்கழே…

விமல், அஞ்சலி நடித்த ‘மாப்ள சிங்கம்’ படம் இம்மாதம் 11 ந் தேதி திரைக்கு வருகிறது. ரகுநந்தன் இசையமைத்திருக்கிற இப்படத்தை ராஜசேகர் இயக்கியிருக்கிறார். படத்தில் ஒரு பாடல். அதைதான் விமலின் நட்புக்காக வந்து பாடிக் கொடுத்திருக்கிறார்கள் அனிருத்தும், சிவகார்த்திகேயனும். இது குறித்து நேற்று கண்ணில் சிக்கிய விமலிடம் கேட்டால், மனுஷன் பூரித்துப் போகிறார். எல்லாரும் பிரண்ட்ஸ்தானேங்க. சிவகார்த்திகேன்டேயும் அனிருத்துகிட்டேயும் இப்படியொரு விஷயம் இருக்கு. வந்து பாட முடியுமான்னு கேட்டோம். உடனே வந்துட்டாங்க. அவங்களோட பிரண்ஷிப்பை நான் வணங்குறேன் என்றார்.

படத்தில் சூரியும் விமலும் இருக்கிற ஸ்டில்களை பார்த்தால், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மாதிரியே ஒரு கலர் இருக்கே என்று டைரக்டர் ராஜசேகரிடம் கேட்டால், “பெஸ்டிவல் மூட் இருக்குங்கறது உண்மைதான். ஆனால் காமெடியெல்லாம் இதுல வேற மாதிரியிருக்கும். சூரி, மட்டுமில்ல, காளி வெங்கட், லொள்ளு சபா சாமிநாதன்னு இருக்கிறதால நீங்க சொல்ற படத்தின் சாயல் இருக்காது” என்றார். படத்தில் லேசாக அரசியல் நெடியும் இருக்குமாம். அஞ்சலிக்கு வழக்கறிஞர் ரோல்.

மாப்ள சிங்கத்திற்காக அஞ்சலி ஆறு கிலோ உடல் இளைத்திருக்கிறாராம். அதுக்கு மாப்ளே விமல்தான் நன்றி சொல்லணும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிச்சைக்காரன் / விமர்சனம்

மண்டை பெருத்த பலர், ‘கதை திரைக்கதை வசனம் லொட்டு லொஸ்கு’ என்று பெருமை கொப்பளிக்க அடுக்குவார்கள். அவை அனைத்தையும் ஒரு சொல்லில் அடக்கி விடலாம். ‘உப்புமா!’ ஆனால்...

Close