பெப்ஸி தொழிலாளர்களுக்கு ஒரு கோடி உதவித்தொகை? விரைவில் விஷால் ஏற்பாடு!

அப்படின்னா இப்ப ஸ்டிரைக் முடியாதா?

பழுக்க வச்ச கம்பியால பல்லு குத்துன கதையாகிடுச்சு தியேட்டர்காரர்களின் பிடிவாதமும், அதற்கான முடிவும். எப்படியும் எங்ககிட்ட வந்துதானே ஆகணும்? என்று காலரை தூக்கிவிட்டுக் கொண்ட அவர்களுக்கு, ‘சிஸ்டத்தை சரி பண்ணாம ஒரு படத்தை கூட வெளியிடப் போவதில்லை’ என்கிற முடிவை எடுத்து கதற விட்டுவிட்டது தயாரிப்பாளர் சங்கம். ‘ஒரு வாரம் கூட இவனுங்களால தாக்குப் பிடிக்க முடியாது’ என்று கூறிவந்த தியேட்டர்கள் சங்கம், அந்து அவலாகிக் கொண்டிருக்கிறது. ஒரு மாதத்தை தாண்டியும் கட்டுக் கோப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது ஸ்டிரைக்.

ஆனால் இந்த ஸ்டிரைக்கை உடைக்கக் கிளம்பியிருக்கும் ஒரு கூட்டம், பெப்ஸி தொழிலாளர்களின் நிலைமையை யோசிச்சு பார்த்தீங்களா? ஸ்கூல் திறந்தா அவங்க பிள்ளைகளுக்கு யூனிபார்ம், புக் செலவு, ஸ்கூல் பீசுக்கெல்லாம் என்ன பண்ணுவாங்க? என்று கேள்வி எழுப்பி சென்ட்டிமென்ட் சாவியை போட்டு பூட்டை உடைக்கப் பார்த்தார்கள். இப்போது அதற்கும் ஒரு தீர்வு கண்டுவிட்டது தயாரிப்பாளர் சங்கம்.

பசையுள்ள தயாரிப்பாளர்களின் உதவியுடன், சுமார் ஒரு கோடி ஃபண்ட் கலெக்ட் பண்ணுவது. இப்படி சேர்க்கும் ஒரு கோடி ரூபாயை பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் கொடுத்து, ஏழைத் தொழிலாளர்களின் அத்யாவசிய தேவையை பூர்த்தி செய்வது. இதுதான் திட்டம். இப்பவே பத்து தயாரிப்பாளர்கள் தலா பத்து லட்சம் தர முன் வந்திருக்கிறார்களாம். ஏற்கனவே இருபது லட்சத்தை வழங்கியிருக்கிறார்கள் கலாட்டா.காம் என்ற இணையதளமும், தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபுவும்.

இந்த ஒரு கோடி திட்டம் தியேட்டர்காரர்களின் மனதில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதில் முக்கியமான கேள்வி இதுதான்.

‘அப்படின்னா… ஸ்டிரைக் இப்ப முடியாதோ? ஜுன் வரைக்கும் கூட நீடிக்குமோ?’

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஏன் சிம்புவுக்கு மட்டும் இப்படியே நடக்குது?

https://www.youtube.com/watch?v=FQjM6EFWNUE&t=97s

Close