சூர்யாவானார் விஷால் குழப்பியடித்த ஸ்ருதிஹாசன்

கொஞ்ச காலமாகவே ‘எடுப்பாகவே’ திரிகிறார் ஸ்ருதிஹாசன். ஆந்திராவுக்கு ஒரு நீதி, அப்பாவி தமிழ்நாட்டுக்கு ஒரு நீதியா? என்று அவரது ரசிகர்கள் சாலை மறியல் செய்வதற்குள் சுதாரித்துக் கொண்ட ஸ்ருதி, ஹரியின் புதுப்படமான பூஜைக்காக (படத்து பேரே பூஜைதான்) ஸ்பெஷலாக ஒரு ஸ்டில் ஷுட் செய்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட படம்தான் நீங்கள் அருகில் பார்த்துக் கொண்டிருப்பது. சற்றே தாராள கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்டில்கள் விளம்பரங்களுக்காக மட்டுமே என்று நினைத்தால் அதுதான் தவறு.

இந்த படத்தில் இதுவரை வந்த ஹரி படங்களில் காண முடியாத மாடர்ன் லவ்வை காண்பிக்க முடிவாகியிருக்கிறதாம். லவ் மட்டுமா மாடர்ன்? விஷால்- ஸ்ருதியின் காஸ்ட்யூம்களும்தானாம். பொதுவாக ஹரி படம் என்றால் வேட்டி, அருவா, வெட்டருவா மீசை என்று கிளிஷேவாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் அந்த எண்ணமே வர விடாமலடிப்பாராம் ஹரி.

படத்தை பற்றிய செய்திகள் இப்படி கசிந்து கொண்டிருக்க, விஷால் பாடு மீண்டும் திண்டாட்டத்திற்குள்ளாகியிருக்கிறது. இதற்கு முன் அர்ஜுன் மகள் திவ்யாவுடன் நடிக்கும் போது ஒட்டி நடிக்க வேண்டிய காட்சிகளில் கூட, அர்ஜுன் சார் கோவிச்சுப்பாரே என்று தயங்கி தயங்கி நடித்தார். ஏனென்றால் விஷாலின் சினிமா குருநாதர் அர்ஜுன்தான். அதே போலதான் இந்த முறையும் நடக்கப் போகிறது.

ஏழாம் அறிவு படத்தில் கூட ஸ்ருதியுடன் நடிக்கும் போது வெட்கப்பட்டுக் கொண்டே நடித்தார் சூர்யா. கமல் சாரோட பொண்ணு. ரொம்ப ரொம்ப தயக்கமா இருந்திச்சு. இருந்தாலும், ஒண்ணும் நினைச்சுக்க மாட்டேன். நெருக்கமா நடிக்க வேண்டிய இடத்துல தைரியமா நடிச்சுருங்க என்று ஸ்ருதியே சொல்லி தைரியமூட்டினாராம்.

இந்த முறையும் அப்படிதான் ஆகும் போலிருக்கிறது. கமல் சார் பொண்ணாச்சே என்கிற அச்சத்தின் காரணமாக போட்டோ ஷுட் சமயத்திலேயே மிகவும் தயங்கி தயங்கி நெருங்கினாராம் விஷால். ஹரிதான், ‘என்னங்க தயக்கம்? ம்… தைரியமா மூவ் பண்ணுங்க’ என்றாராம்.

எந்த பழத்துல செஞ்ச ஊறுகாயா இருந்தா என்ன? பாட்டிலை தெறந்தமா, படக்குன்னு கவுத்தமான்னு இருக்கணும்… புரியுதா விஷால்?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘என்ன சார் இப்படியெல்லாம் கேட்கிறீங்க? வெட்கப்பட்ட நடிகை

ஒரு நடிகைக்கு வாக்கு குளறலாம். நாக்கு குளறலாமோ? தெரியாமல் சிக்கிக் கொண்டார் ரூபா மஞ்சரி. ‘என்ன சார் இப்படியெல்லாம் கேட்கிறீங்க? என்று அவர் வெட்கப்பட்டு வேதனைப்பட்டு துயரப்பட்டு...

Close