விஷால் மயக்கம்! எதிர் அணியினர் தாக்கியதாக குற்றச்சாட்டு? வாக்கு சாவடியில் பதற்றம்!
நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் வாக்கு சாவடியில் சுமார் 12.30 மணியளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதை தொடர்ந்து இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் விஷாலை யாரோ தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மயக்கமுற்ற அவரை பத்திரமாக கேரவேனுக்குள் ஓய்வெடுக்க வைத்திருக்கிறது விஷால் அணி.
நடிகை சங்கீதா ஓட்டுப் போன போது அவரை சரத் அணியை சார்ந்த ஒருவர் பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதை கேட்கப்போன விஷாலும் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையினர் இரு தரப்புக்கு இடையேயான தள்ளுமுள்ளுவை முடிவுக்கு கொண்டுவர போராடி வருகிறார்கள்.
விஷாலை கேரவேனுக்குள் சென்று பார்த்துவிட்டு வெளியே வந்த வடிவேலு, விஷாலை சரத் அணியினர் தாக்கியதாக குற்றம் சாட்டினார். தோல்வி பயத்தில் தேர்தலை நிறுத்த சரத் அணியினர் முயல்வதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில் வெளியே வந்த விஷால், நடிகரல்லாத ஒருவர் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டினார். ஆனால் சரத்குமாரே விஷாலை தாக்கியதாக பார்வையாளர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள்.