எவனாயிருந்தாலும் வெட்டுவேன்…! விஷால் ஆவேசப்பட்டது ஏன்?

‘அதுக்கெல்லாம் ஒரு தில்லு வேணும்’ என்று விஜய்யின் அப்பாவே விஷாலை புகழ்கிற அளவுக்கு இருக்கிறது அவரது செயல்பாடு. எப்படி? இன்று ‘ஆம்பள’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்தவர்களுக்கு புரிந்திருக்கும் அது.

சுந்தர்சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் ‘ஆம்பள’ படம் எதிர்வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. ‘ஒரு படம் துவங்கும் போதே, அந்த படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவிப்பது சாதாரண விஷயம் இல்ல. அதுக்கெல்லாம் ஒரு தில்லு வேணும். அது விஷாலிடம் இருக்கு’ என்று நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாரளராக வந்த எஸ்.ஏ.சி கூற, விஷால் ரசிகர்களின் விசில் சப்தம் காதை பிளந்தது. எப்போதும் விஷாலுக்காக தோள் கொடுக்கும் ஆர்யா இல்லாமல் இந்த விழா நடந்துவிடுமா என்ன?

மைக்கை பிடித்து ஆர்யா பேசிய விஷயம்தான் இந்த செய்தியின் தலைப்பு. ‘ஆம்பள பொங்கலுக்கு ரிலீஸ்டா மச்சான்னு எங்கிட்ட விஷால் சொன்னப்ப, பார்த்துடா… முக்கியமான படமெல்லாம் வருதுன்னு சொன்னேன். எவனாயிருந்தாலும் வெட்டுவேன்னான்…’ என்று ஆர்யா சொல்ல, அதற்கும் கைதட்டல்! ‘இந்த ஆடியோ வெளியீட்டு விழா இல்லாமலே கூட படத்தை ரிலீஸ் பண்ணலாம்னுதான் நினைச்சேன். ஆனால், இந்த படத்தின் மியூசிக் டைரக்டர் ஹிப்ஹாப் தமிழனை எல்லாருக்கும் முன்னாடி அறிமுகப்படுத்தி பாராட்டணும்தான் இந்த விழாவே ஏற்பாடு செஞ்சேன்’.

‘நீங்க நம்ப மாட்டீங்க. இந்த படத்தின் பாடல் கம்போசிங்குக்கு நாங்க பாங்காக்கோ, பெல்ஜியமோ போகல. இங்கயிருக்கிற ராஜா அண்ணாமலை புரத்தில்தான் கம்போசிங் பண்ணினோம். மொத்தம் 2500 ரூபா செலவு. அதுல 200 ரூபாய் மட்டும் எங்களுக்கு செலவு பண்ணியிருப்பார். மற்றதுக்கெல்லாம் அவரே பஜ்ஜி வாங்கி சாப்பிட்டார். சங்கீதம் பிடிச்ச மாதிரியே அவருக்கு சாப்பாடும் பிடிக்கும்’ என்று ஒரு அறிமுக இசையமைப்பாளரை தன் நெடுநாள் தோழன் போல அறிமுகப்படுத்தினார் விஷால்.

‘இந்த படத்துல எனக்கு ஜோடி ஹன்சிகான்னு சொன்னவுடனே செத்தாண்டா கேமிராமேன்னு முடிவு பண்ணிட்டேன். ஏன்னா ஹன்சிகா இருக்கிற கலருக்கும் என் கலருக்கும் பொதுவா இருக்கிற மாதிரி லைட்டிங் பண்ணணும். அது பெரிய விஷயமாச்சே. படத்துல ஒரு பாடல் வரி கூட வருது. நீ லண்டன் லட்டு. நான் மதுரை புட்டுன்னு. அந்த வரி அப்படியே எங்களுக்கு பொருந்தும்’ என்று மைக்கை வைக்கிற நேரத்தில் மறுபடியும் சிரிக்க வைத்தார் விஷால்.

படத்தின் பாடல்கள் அத்தனையும் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட்டாக இருக்கப் போவது மட்டும் நிச்சயம். ஏனென்றால்…? அதை நாங்க சொல்வதை விட ஒரு முறை கேட்டுப் பாருங்க… புரியும்!

பின்குறிப்பு- காலையில்தான் இத்தாலியிலிருந்து பிளைட்டில் வந்து இறங்கினாராம் ஹன்சிகா. அப்படியே ஃபிரஷ் பண்ணிய ஈரத்தோடு இங்கு வந்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வெள்ளக்கார துரை – விமர்சனம்

‘லாண்டரியில எலி புகுந்தா லங்கோடு கூட மிஞ்சாது’ என்பார்களே... அப்படியொரு படம்! எப்பவோ ஒரு சீன்ல சிரிச்சோம், எப்பவோ ஒரு சீன்ல கைதட்டுனோம்னு இல்லாம இஞ்ச் பை...

Close