அநியாயமா மிஷ்கினிடம் லாக் ஆகிட்டாரே விஷால்?

மிட் நைட் கண்ணன் மிஷ்கினின் படங்கள் வேண்டுமானால் சீரியஸ் ஆக இருக்கலாம். ஆனால் மிஷ்கின் எப்பவுமே மீம்ஸ் கிரியேட்டர்களின் உலகத்தில் டாப் ஸ்டார்தான்! நடை, உடை, பாவனை, அலட்டல், குலுக்கல் எல்லாவற்றிலும் அவரை மிஞ்ச ஆள் இல்லை. ஆனால் அவர் ஒரு டைப்பான சீரியஸ் என்றால் வேறொரு டைப்பான நபர் விஷால். இவ்விருவரும் ஒரு படத்தில் இணையப் போகிறார்கள் என்பதுதான் இப்போதைய ஹாட்! பாலாவையே சமாளித்துவிட்ட விஷாலுக்கு மிஷ்கினின் காமெடிகள் அதிக சேதாரத்தை தராது என்று இப்போதைக்கு நம்புவோமாக!

இன்னொரு முக்கியமான மேட்டர். லிங்குசாமியை விஷால் கழற்றி விட்டுவிட்டதாகதானே நம்பிக் கொண்டிருக்கிறது உலகம். உண்மை அது அல்லவாம். போன வாரமே லிங்குசாமி தன் அமில வாய் திறந்து, “இந்த படத்தை டிராப் பண்ணிடலாம் என்று கூறிவிட்டாராம். ஏன்? பட்ஜெட் பிரச்சனை. இதையடுத்து விஷாலின் முகம் கோண, அதற்கப்புறமும் அந்த கூட்டணி தொடர்வதற்கு என்ன வேண்டுதலா? லிங்கு வாய் திறப்பதற்கு முன் தானே முந்திக் கொண்டாராம் விஷால்.

ஆனால் தன்னை வேண்டாமென சொன்ன லிங்குசாமிக்கு பாடம் புகட்ட வேண்டுமல்லவா? தொடர்ச்சியாக நான்கு படங்களை புக் பண்ணிவிட்டார். அதில் முதலில் சூடம் கொளுத்தப் போகிறவர்தான் நம்ம மிஷ்கின். அதற்கப்புறம் சுராஜ், அவருக்கு பின் கே.எஸ்.ரவிக்குமார். அதற்கப்புறம் மாதேஷ். இப்படி நான்கு டைரக்டர்களை அடுத்தடுத்து கமிட் பண்ணி வைத்திருக்கும் விஷால், இந்த நான்கு படத்தையுமே அவரது சொந்த பேனரில்தான் எடுக்கப் போகிறாராம்.

எவ்ளோ பார்த்துட்டாரு. இவங்களையும்தான் பார்க்கட்டுமே?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சித்தி ராதிகாவின் அடுத்த பாய்ச்சல்! ஷார்ட் பிலிம் டைரக்டர்களுக்கு யோகம்!!

‘ராதிகா கைய வச்சா அது ராங்கா போனதில்லே’ என்பதற்கு பெரிய உதாரணம் அவரது ராடன் டி.வி நிறுவனம்தான். வீட்டுக்கு வீடு கேபிள் வழியாக நுழைந்து கொள்ளை கொள்ளையாக...

Close