ராதா ரவியும் விஷாலும் ஒரே இடத்தில்! அந்த பரபர நிமிஷங்கள்?

தானுண்டு தன் பிட்னஸ் உண்டு என்று தண்டாலும், புல் அப்சுமாக திரிந்த விஷாலை, ‘நாயே’ என்று விமர்சனம் செய்து நடிகர் சங்க செயலாளராகவே கொண்டு வந்து உட்கார வைத்துவிட்டார் ராதாரவி. பொறிக்கடலைன்னு நினைச்சா, இப்படி பொங்குமாங் கடலா இருக்காரே என்று ராதாரவியே கூட வியப்புற்றிருக்கலாம். சினிமாவை விடவும் சிறப்பான அதிரடி காட்சிகள் இவ்விருவர் விஷயத்திலும் இருந்து வந்த நிலையில்தான், விஷால் ஹீரோவாக நடிக்கும் மருது படத்தில் ராதாரவிக்கு ஒரு முக்கிய ரோல் கொடுத்து நடிக்க வைத்துவிட்டார் அப்படத்தின் இயக்குனர் முத்தையா. (அதெல்லாம் வேண்டாம் என்று விஷால் சொல்லியிருந்தால் நடந்திருக்கப் போவதில்லை. அதற்கும் சம்மதித்த விஷாலுக்கு தனியாக ஸ்பெஷல் தட்டில் ஆரத்தி)

படப்பிடிப்பில் என்ன நடந்தது? அதை விஷால் வாயால் கேட்பதுதான் விசேஷம்.

“ராஜபாளையத்தில் ஷுட்டிங் நடந்துகிட்டு இருந்திச்சு. திடீர்னு புரடக்ஷன் மேனேஜர், அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் எல்லாம் வந்து, “சார் நாளைக்கு ராதாரவியண்ணே வர்றாரு” என்றார்கள். சரி வரட்டும் என்று சொல்லிவிட்டு வேலையை பார்க்க போயிட்டேன். மறுநாள் அதே பரபரப்போட வந்து, “அவர் ஊருக்குள்ள வந்துட்டார் ” என்றார்கள். அப்புறம் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துகிட்டு இருக்கார்னு நிமிஷத்துக்கு நிமிஷம் லைவ் கமென்ட்ரி கொடுத்துகிட்டேயிருந்தாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல. ராதாரவியண்ணனுக்கும் எனக்கும் தேர்தலில் போட்டியிருந்தது. அது தனி. இங்க நடக்கறது ஷுட்டிங். ஆனால் ஏன் எல்லாரும் இப்படி பரபரக்குறாங்கன்னு புரியல”.

“ஷுட்டிங் ஸ்பார்ட்டில் நானும் அவரும் சேர்ந்து நடிக்கிற காட்சி. சுற்றியிருக்கிற அவ்வளவு பேரும் ஏதோ நடக்காத ஒரு விஷயம் நடக்கறது மாதிரி அப்படி பார்த்துகிட்டு இருக்காங்க. அந்த நேரத்தில் நான் அவரை பார்த்து ஒரு டயலாக் சொல்லணும். அதுதான் ரொம்ப கவனிக்க வேண்டிய முக்கியமான டயலாக். அது என்னன்னு நான் இப்ப சொல்ல மாட்டேன். படத்துல பாருங்க. அப்பதான் சுவாரஸ்யமா இருக்கும். பட்… ஐ ரெஸ்பெக்ட் ராதாரவியண்ணே” என்றார் விஷால்!

ஒரு பெரிய விக்கெட்டை சாய்ச்சுட்டீங்க விஷால்! இன்னும் ஒண்ணு எப்போ?

2 Comments
 1. roja says

  ஒரு பெரிய விக்கெட்டை சாய்ச்சுட்டீங்க விஷால்! இன்னும் ஒண்ணு எப்போ?
  That wicket is very hard to get.First he need to finish the building then has to try for that wicket.
  Anyway he needs to get the wicket for his life approval.he he he

 2. roja says

  ஒரு பெரிய விக்கெட்டை சாய்ச்சுட்டீங்க விஷால்! இன்னும் ஒண்ணு எப்போ?
  That wicket is hard.First he needs to build the building,but he needs that wicket unless he cannot get married.he he he

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அச்சமின்றி படத்தின் டீசர் விஷால் வெளியிடுகிறார்

என்னமோ நடக்குது என்ற வித்தியாசமான படத்தைத் தயாரித்த டிரிபிள் வி ரெகார்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக வி.வினோத் குமார் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் " அச்சமின்றி...

Close