விஷால் அணி தோற்றதா? எல்லாம் ஒரு உள் குத்துதான்!

எவ்வளவு பெரிய ரவுடியா இருந்தாலும் முதல் அடி நம்மளுதா இருக்கணும் என்கிறது தினத்தந்தியின் ‘சாணக்கியன் சொல்’. எல்லாம் மன ரீதியாக கவுக்குற யுக்திதான். அதைதான் விஷால் விஷயத்திலும் அப்ளை பண்ண பார்த்திருக்கிறார்கள் போலும். கடந்த சில மாதங்களாக நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகத்தை எதிர்த்து மல்லுக்கட்ட ஆரம்பித்த விஷாலுக்கு சினிமாவில் பல மட்டங்களில் இருந்தும் சப்போர்ட். அது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நேரத்தில்தான் வந்து தொலைத்தது சேலம் நாடக நடிகர்களின் தேர்தல்.

இங்கு நடக்கும் தேர்தலில் விஷால் அணியின் சார்பாக நான் நிற்கிறேன் என்று ஒருவர் நின்றிருக்கிறார். நல்ல விஷயம். ஆனால் இவரை எதிர்த்து நின்ற கோஷ்டி நாங்கள் யார் அணிக்கும் சப்போர்ட் இல்லை என்று சொல்லியே தேர்தலில் நின்றது. வேடிக்கை என்னவென்றால் யார் அணிக்கும் சப்போர்ட் இல்லாத இவர்கள், சேலம் நகருக்கு விஷால் ஓட்டு கேட்டு போன போது உள்ளேயே விடக் கூடாது என்று தடுத்தார்களாம். மதுரை, பட்டுக்கோட்டை என்று பல்வேறு பகுதிகளுக்கு சென்ற விஷாலுக்கு அங்குள்ள நாடக நடிகர்கள் பலத்த வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். விஷாலுக்கு சப்போர்ட் மங்கியது சேலத்தில்தான்.

இந்த நேரத்தில் இங்கு நடந்த தேர்தலில் அந்த விஷால் அணி நாடக நடிகருக்கு தோல்வி கிடைத்திருக்கிறது. இருந்தாலும், முழு பலத்தோடு இருந்த ராதாரவி அணி சங்கத்திலிருந்து 24 பேர் விஷால் அணிக்கு வாக்களித்திருக்கிறார்கள். நடிகர் சங்க தேர்தலில் வாக்குரிமை பெற்றிருக்கும நாடக நடிகர்களின் ஓட்டு வங்கியில் இது 40 சதவீதமாம். நகர்த்தவே முடியாது என்று இருந்த மலையை லேசாக நகர்த்தி பார்த்த விஷாலுக்கு, இந்த 24 ஓட்டுகள் விழுந்ததை சற்று அதிர்ச்சியோடுதான் கவனிக்கிறதாம் சென்னை. ஆனால் இந்த சின்ன பொறி, பெரும் தீயாக மாறிவிடக் கூடாது என்பதாலும், மன ரீதியாக சோர்வடைய வைத்துவிட வேண்டும் என்பதற்காகவும் இந்த செய்தியை பெரிதாக்கிவிட்டார்களாம்.

நிஜத்தில் விஷாலே தேர்தலில் நின்ற பின் அவருக்கு கிடைக்கும் வாக்குகள் மட்டுமே அவருக்கு தோல்வியா, இல்லையா என்பதை தீர்மானிக்கும். அதுவரைக்கும் இப்படியெல்லாம் ஊருக்குள் தமுக்கடிப்பது எதிர் கோஷ்டிகளின் யுக்தி என்கிறார்கள் விஷால் தரப்பில்.

1 Comment
  1. Aslan says

    I’m shokced that I found this info so easily.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இங்கேன்னா ரெண்டு அங்கேன்னா ஐம்பது! இருந்தாலும் நயன்தாரா ஓ.கே!

எப்பவுமே சொந்த ஊர் சோன் பப்டிக்கு ருசி அதிகம் என்பதை நிரூபித்திருக்கிறார் நயன்தாரா. தமிழ்சினிமாவில் நயன்தாராவுக்கு இருக்கிற மாஸ், வேறெந்த ஹீரோயின்களுக்கும் இல்லை. மார்க்கெட் விஷயத்தில் அவர்...

Close