விஜய்யை வம்புக்கு இழுக்கும் விஷால்!?

விஷாலை சுற்றி ஒரு இஞ்ச் உயரத்திற்கு கண்ணுக்கு தென்படாத பாசிட்டிவ் கரெண்ட் ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. அதுதான் அவரை நம்பிக்கையோடு இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதை சமீபத்தில் விஷாலின் பேச்சை கேட்டு வருகிறவர்கள் நன்றாகவே உணர்வார்கள். ‘கான்பிடன்ட்…’. இந்த ஒற்றை வார்த்தையின் மொத்த உருவமாக நடமாடிக் கொண்டிருக்கிறார் அவர். ‘பாண்டியநாடு’ படத்தின் வெற்றிக்கு பிறகுதான் இந்த பாசிட்டிவ் எனர்ஜி அவரிடம். ஆனால் அது தந்திருக்கும் ‘கனமான’ நம்பிக்கையில் மற்றவர்களை ‘லேசாக’ நினைக்கிறாரோ என்கிற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது விஷாலின் ரீசன்ட் நடவடிக்கைகள்.

‘பூஜை’ படத்தின் ட்ரெய்லரை பார்த்தவர்களுக்கு புரியும்… அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது! மேலோட்டமாக பார்த்தும் புரியாதவர்கள் கொஞ்சம் புலனாய்வு கண்ணோடு பார்த்தால் சட்டென்று விளங்கும். இந்த படத்தை பற்றி முதன் முறையாக அறிவிக்கிற சமயத்தில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் ‘தீபாவளி வெளியீடு’ என்று மிக மிக நம்பிக்கையோடு அறிவித்துவிட்டுதான் படப்பிடிப்புக்கே போனார் விஷால். அப்போதெல்லாம் விஜய்யின் கத்தியும் சரி. ஷங்கரின் ஐ -யும் சரி. தீபாவளிக்கு வருவதாகவே இல்லை. ரிலீஸ் என்னவென்றே தெரியாத நிலைமை அவர்களுக்கு.

இப்போது வெளிவருகிற தகவல்கள் எல்லாமே கத்தியும் ஐ-யும் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக கூறுகின்றன. முதன் முதலில் ‘தீபாவளி வெளியீடு’ என்று தன் படத்தை அறிவித்தவர் விஷால்தான். இப்போது விநியோகஸ்தர்கள் பலரும் ‘ஐ வருதாம். கொஞ்சம் தள்ளி வர்றீங்களா? ஐ வரலேன்னாலும் கத்தி வருதாம். அது கூடவா மோதணும்?’ என்றெல்லாம் விஷாலை சீண்டிவிட, அதற்கான பதிலாகதான் ட்ரெய்லரில் வெடித்திருக்கிறார் விஷால்.

உற்று கவனித்தால் புரியும். ஷாட்டுக்கு நடுவில் ஒருவர் மீது ஒரு கத்தி வந்து பாயும்… அதற்கப்புறம் விஷால் திரையில் தோன்றி ‘நான் வர்ருவேண்ண்ண்ண்ண்ண்டா…..’ என்பார் சப்தமாக!

மீண்டும் தலைப்பை படிக்கவும்!

1 Comment
  1. jessy says

    இது உங்களுக்கு கொஞ்சம் ஓவரா தெரியல…?
    பூஜை போட்ட அன்னிக்கே ரிலீஸ் தேதி சொல்லிட்டு போனவர் விஷால்.

    ஐ படமும் கத்தியும் பின்னாடி வந்து சேர்ந்துட்டு இருக்கு. அவங்க வந்து சேர்ந்துட்டா உடனே இவர் விட்டு குடுக்கணுமா ? ஏன் அவரோட சுயமரியாதை அவருக்கு இருக்காதா ?

    அவர் படத்து மேல அவருக்கு நம்பிக்கை இருக்கு. ரிலீஸ் பண்றாரு. பாண்டியநாடு படத்தைப்போ கூடத்தான் ரெண்டு பெரிய படம் ரிலீஸ் ஆச்சி.

    சரியா சொல்லனும்னா தலைப்பு விஷாலை வம்புக்கு இழுக்கிறாரா விஜய்ன்னு தான் தலைப்பு இருக்கணும்…!!!!!!!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Jeeva trailer

http://youtu.be/NvEJOGoSfMo

Close