நட்சத்திர கலை விழா கிடையாது! அப்புறம் எப்படி பில்டிங்? விஷால் புதுத்திட்டம்!
இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டது விஷால் தலைமையிலான பாண்டவர் அணி. இதெல்லாம் சர்வ மங்கள சுப மஸ்துதான்…. பட், நடுவில் நம்மை ஆச்சர்யப்படுத்தியது ஒன்றே ஒன்று. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணுவும் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆதரவு சரத் அணிக்குதான் என்று வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டவர் அவர். பிறகு எப்படி இந்த திடீர் திருப்பம்?
இவரது தன்னிச்சையான நிலைபாட்டை வன்மையாக கண்டித்த இன்னொரு அணி, ‘கிழிக்கிறதுக்கு ஒரு சட்டை கிடைச்சுதுடா’ என்று இந்த பிரச்சனையை கையில் எடுக்க, சங்கம் இப்போ ரெண்டா பிளக்குற நிலையில் இருக்கிறது. இந்த நேரத்தில் விஷால் அணிக்கு ஒரு பூங்கொத்தையும் புன்னகையையும் சப்ளை செய்தாலொழிய சங்கத்தின் கொதிப்பில் சிங்கிள் சென்டிகிரெட் கூட குறையாது என்பதை மிக நன்றாக புரிந்து வைத்திருந்தார் தாணு. அதனால்தான் இந்த விசிட்.
போகட்டும்… விஷாலின் அறிவிப்பு என்ன? அறிவிப்பு நம்பர் ஒன்று- பாண்டவர் அணி என்று ஒன்று சேர்த்து தேர்தலில் போட்டியிட்டோம். இனி அணி கிணியெல்லாம் கிடையாது. பாண்டவர்ங்கற போர் தேர்தலோடு போச்சு. இனிமே எல்லாரும் நடிகர்கள். எங்களுக்குன்னு ஒரு சங்கம். அவ்வளவுதான் என்றார். அறிவிப்பு நம்பர் ரெண்டு? நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு நட்சத்திர கலைவிழா நடத்தப் போவதில்லையாம். எல்லா நடிகர் நடிகைகளும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பார்கள். அதில் வரும் வருமானத்தில் கட்டிடம் கட்டப்படுமாம். ரஜினி, கமல், அஜீத்(?), விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட அத்தனை பேரும் அதில் இருப்பார்கள் என்று இப்போதைக்கு நம்புவோம்.
இது ஒருபுறமிருக்க இன்னொரு திட்டமும் இருக்கிறதாம். அது நட்சத்திர கிரிக்கெட்! ஏற்கனவே அதில் நிறைந்த அனுபவம் விஷாலுக்கு இருப்பதால், இதுவே அவர்களின் முதல் வசூல் ரசீதாக இருக்கும் போலிருக்கிறது.
அடிக்கிற அடியில் தாரை தப்பட்டையெல்லாம் கிழியட்டும்
தமிழ் நாடு நடிகர் சங்கம் என்ற பெயர் தான் பொருத்தமானது.
உண்மையான தமிழர்கள் இதனை ஆதரிப்பார்கள்.