அஜீத் படத்தில் சாதித்தவருக்கு விஜய் படத்தில் வாய்ப்பில்லையா? இன்டஸ்ட்ரி அதிர்ச்சி!
மலையோடு மோதுவதென்றால் சின்ன உளியாகவாவது இருக்க வேண்டும். ஆனால் தலையைக் கொண்டு மலையை மோதியவர் கே.ஜே.ஆர் ராஜேஷ். ‘விஸ்வாசம்’ படத்தின் தமிழக உரிமையை வாங்கிய ராஜேஷ், அதை ரஜினியின் ‘பேட்ட’ படத்தோடு மோதிய சம்பவம் சாதாரணமானதல்ல. நாடு முழுக்க தியேட்டர்களுக்கு நெட் போட்டு வளைக்க முயன்ற சன் பிக்சர்சுக்கே செம டஃப் கொடுத்தார்.
தனது புத்தி சாதுர்யத்தாலும், வேகமான செயல்பாடுகளாலும் விஸ்வாசத்தை கணிசமான தியேட்டர்களில் வெளியிட்டு சுமார் 160 கோடி வரை கலெக்ட் பண்ணிக் காட்டியதால் இன்டஸ்ட்ரியில் பலரும் இவர் மீது திடீர் மரியாதை கொண்டார்கள். சூட்டோடு சூடாக விஜய் 63 படத்தின் தமிழக உரிமையையும் வாங்கி வெளியிட துடித்தார் கே.ஜே.ஆர் ராஜேஷ்.
படம் துவங்கிய நாளில் இருந்தே தனக்கான இடத்தை கர்சீப் போட்டு காத்து வந்த ராஜேஷுக்கு திடீர் ஏமாற்றம். படத்தை வாங்க மேலும் சிலர் முன் வந்தார்கள். பலத்த போட்டி. இதில் சொல்லும் விநியோகஸ்தருக்குதான் படம் என்பதில் தெளிவாக இருந்ததாம் ஏ.ஜி.எஸ் நிறுவனம். விஜய்யின் மனசாட்சியாக இருக்கும் மதுரை அன்புவின் அட்வைசின் பேரில் படம் ஸ்கிரின் சீன் என்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்டுவிட்டது.
விஸ்வாசம் போலவே வெறியாட்டம் ஆடிடலாம் என்று நினைத்த ராஜேஷுக்கு இந்த முடிவு ஏமாற்றம்தான். ஆனால், விஜய் 63 போனாலென்ன? விஜய் 64 க்கும் மோதிப் பார்ப்பதுதானே வியாபாரிக்கு அழகு?
அடுத்த பெஞ்ச்ல கர்சீப் போடுங்க பாஸு!