விதார்த்துக்கு திருப்பதியில் திருமணம்! சென்னையில் வரவேற்பு!
காதல் கிசுகிசுக்களில் சிக்கிக் கொள்ளாத ஒரே ஹீரோ என்று கூட விதார்த்தை பாராட்டலாம். அமலாபால் யார் யாருடனெல்லாம் நடித்தாரோ, அத்தனை பேருடனும் அவரை இணைத்து பேசியிருக்கிறது கோடம்பாக்கம். நல்லவேளையாக அவர் அதற்கெல்லாம் ஓய்வு கொடுத்துவிட்டு இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டார். மைனாவில் அமலாபாலை படம் முழுக்க முழுகில் சுமந்து நடித்தும் கூட ஒரு கிசுகிசுவுக்கும் இடம் தராத விதார்த்துக்கும் இப்போது திருமணம்.
இவருக்கும் பழனியை சேர்ந்த காயத்ரிதேவிக்கும் திருமணம் செய்வதாக பெரியோர்களால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நேற்று பழனியில் இந்த திருமண நிச்சயார்த்தம் நடைபெற்றது. ஜுன் 11 ந் தேதி திருப்பதியில் திருமணம்.
திரையுலகத்தை சேர்ந்த பலரும் நேரில் வந்து வாழ்த்துவார்கள் அல்லவா? அவர்களுக்கு வசதியாக சென்னை வடபழனியில் இருக்கும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜுன் 17 ந் தேதி திருமண வரவேற்பை நடத்தவிருக்கிறார் விதார்த்.