ஸ்பாட்ல வச்சு இன்விடேஷன்? அமலாபாலை நேரம் பார்த்து வெளுத்த விவேக்!

அமலாபால் திருமணத்திற்கு பிறகு அவர் நடித்து வரும் முதல் படம் ‘வேலையில்லா பட்டதாரி’யாகதான் இருக்கும். கொஞ்சம் கூட புதுப்பொண்ணு களையில்லாமல் அதே நடிகையாக வந்திருந்தார் இப்படத்தின் பிரஸ்மீட்டுக்கு. டைட் ஸ்கர்ட், மேலே ஒரு தொள தொள பனியன் கெட்டப்பில் வந்த அவரிடம் ‘நான் ரிட்டயர் ஆகலைப்பா’ புத்துணர்ச்சி இருந்ததென்னவோ உண்மை. நேர்ல பார்த்தா புடுங்கி வச்சுரணும் என்று நினைத்திருப்பார் போல. தனக்கேயுரிய ஸ்டைலில் ஒரு இடி இடித்தார் விவேக்.

‘ஷுட்டிங் ஸ்பாட்ல எனக்கு இன்விடேஷன் கொடுத்தாங்க. ஸாரி என்னால வர முடியல. வேற ஏதாவது பங்ஷன்னா அடுத்த முறை வந்துடுறேன்னு சொல்லலாம். பட்… இதுக்கு அப்படி சொல்ல முடியாதே’ என்று கூற, ‘ஞே’ என்று விழித்தார் அமலா! (இவரை போன்ற பெரிய நடிகர்களுக்கு, சாதித்தவர்களுக்கெல்லாம் வீட்டில் போய் முறையா இன்விடேஷன் கொடுக்கலேன்னா இப்படிதான்) முதலில் இந்த கதையில் வரும் தன் போர்ஷனை கேட்டுவிட்டு நடிக்க மனசில்லாமல் திரும்பிவிட்டாராம் விவேக். ஆனால் கிளம்புகிற நேரத்தில், ‘சார்… இந்த முறை உங்களுக்கு பிடிக்கலேன்னா பரவாயில்ல. ஆனால் அடுத்த முறை உங்களுக்கு பிடிக்கிற மாதிரி ஒரு கேரக்டரை வச்சுகிட்டு உங்களை கூப்பிடுவேன். அதில் உங்களை நடிக்க வைக்காம விட மாட்டேன்’ என்று தனுஷ் கூற, நடிக்க முடியாது என்று மறுத்த பிறகும் தன் மீது அன்பு குறையாமலிருந்த அவரது குணத்தை பார்த்துவிட்டுதான் இதில் நடிக்க சம்மதித்தாராம் விவேக். நான் முடியாதுன்னு பிடிவாதமா இருந்திருந்தா ஒரு நல்ல படத்துல நடிக்கக் கூடிய வாய்ப்பை இழந்திருப்பேன் என்றார் விவேக்.

நான் தனுஷ் சாரோட நடிக்கணும்னு பல முறை ட்ரை பண்ணியும் ஏதேதோ காரணங்களால் முடியாம போச்சு. இப்பதான் அதுக்கான சந்தர்ப்பம் கிடைச்சது. தேசிய விருது வாங்கிய நடிகர் அவர். தனுஷ் சாரோட நடிச்சது ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு என்றார் அமலா பால்.

ஆறரை மணி பிரஸ்மீட்டுக்கு சுமார் எட்டரை மணிக்கு உள்ளே நுழைந்தார் தனுஷ். அதுவும் ஒரு காலை நொண்டிக்கொண்டே. ஸாரி… கொஞ்சம் லேட்டாயிருச்சு என்று அவர் கேட்டுக் கொண்டதை இனிமேலும் தொடராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமே என்கிற அச்சம் பிரஸ்சுக்கு. எல்லாருக்கும் தனித்தனியாக நன்றி சொன்னவர், சமுத்திரக்கனிக்கு மட்டும் கொஞ்சம் ஸ்பெஷலாக நன்றி தெரிவித்தார். இந்த படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடிக்கிறாராம் சமுத்திரக்கனி. கொஞ்சம் கொஞ்சம் தயங்கி தயங்கிதான் எனக்கு அப்பாவா நடிக்கிறீங்களான்னு கேட்டேன். அவரோட பிரண்ட்ஸ்செல்லாம் கூட அப்பாவா நடிக்கணுமா?ன்னு தடுத்திருக்காங்க. பட்… அவர் நடிச்சு கொடுத்தார். தேங்க்ஸ் சார் என்றார் தனுஷ்.

வேலையில்லா பட்டதாரி படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடிக்கும் சுரபிக்கு (இவன் வேற மாதிரி ஹீரோயின்) தமிழ் தெரியாது. ஆனால் அவரது அரைகுறை டிரஸ்சை வைத்துக் கொண்டு தனுஷ் விவேக் இருவரும் அவரை கிண்டல் செய்ய, ஐயோ பாப்பா… ஒன்றுமே புரியாமல் அமர்ந்திருந்தது.

வேலையில்லா ‘கெட்ட’ தாரிகளிடம் சிக்கினா இப்படிதாம்மா…!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வந்தார்… வாங்கினார்… சென்றார்… ஆட்டிட்யூட் சந்தானத்தால் அதிர்ச்சியான திரையுலகம்!

தனது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேரும் புறக்கணித்ததிலிருந்தே பெருத்த சோகத்திலும், அதைவிட பெருத்த கடுப்பிலும் இருக்கிறார் அவர்....

Close