விஜய், சூர்யா, விக்ரமை வம்புக்கு இழுத்த விவேக்?
வாய் வளர வளர வாய்ப்பு குறைய ஆரம்பிக்குதுன்னு அர்த்தம். விவேக்கை போல உச்சாணிக் கொம்பில் ஏறி நுனி கிளையை ஆட்டிய நடிகரே இல்லை. அந்தளவுக்கு பிஸி பிஸி என்று இருந்த விவேக், ரஜினி கமல் அஜீத் விஜய் விக்ரம் சூர்யா ஆகியோரால் ஒரே நேரத்தில் புறக்கணிக்கப்பட்டது அவரது திருவாய் செய்த திருவிளையாடலன்றி வேறில்லை. இப்போதுதான் மெல்ல அஜீத் படத்தில் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார். அதற்குள்?
இவர் ஹீரோவாக நடித்த ‘இவன்தான் பாலா’ படத்தில் ஒரு கலகலப்பான டயலாக் வருகிறதாம். ஆனால் அது விவேக்கின் நீள அகல வாய் துடுக்கு அல்ல, முற்றிலும் ரசிக்கக் கூடிய காமெடிதான். இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களை, ‘பார்றா… விவேக் இன்னும் அப்படியேதான் இருக்காரு’ என்று சொல்ல வைக்காமல் விடாது.
‘விளம்பரத்துல விஜய்யும் சூர்யாவும் வந்து வந்து நகைய வாங்க சொல்றாங்க. வாங்குன நகையை இங்க கொண்டு வந்து அடகு வைன்னு சொல்றாரே விக்ரம்?’ இதுதான் அந்த டயலாக். பொதுவாகவே விவேக் அந்தந்த காலகட்டத்தில் நடக்கும் விஷயங்களை கொண்டே நக்கல் அடிப்பார்.
அப்படி பார்த்தால் இது பொருத்தமான நக்கல்தான்.
நீரு ஏம்வே விவேக்க வம்புக்கு இழுக்கீரு?
பழய பகை இன்னும் தீரலியா?