சிரிப்பா சிரிக்குது கருத்து சுதந்திரம்?

ஈழ தமிழர்களை அவமதிக்கும் ‘இனம்’ படத்தை தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுந்தபோது, கோடம்பாக்கத்தில் லிங்குசாமிக்கு பிரியமான சில இயக்குனர்கள் பொங்கியெழுந்துவிட்டார்கள். ஒரு படைப்பாளியின் கருத்து சுதந்திரம் இப்படி கண்டவங்களாலும் சிதையுதே என்று கவலைப்பட்டார்கள். அறிக்கை வெளியிட்டார்கள். ஆவேசப்பட்டார்கள். குறிப்பாக அமீர், பாலாஜி சக்திவேல், சசி, செல்வமணி, விக்ரமன் போன்றவர்கள், ‘அந்த படத்தில் ஒன்றும் குறையிருப்பதாக தெரியவில்லையே?’ என்றெல்லாம் கூறியபோது நம்ம இனத்துக்கே இப்படி நாக்கு குளறுதே என்று கவலைப்பட்டார்கள் சினிமாக்காரர்கள்.

அன்று கூட்டமாக கிளம்பி கருத்து சுதந்திரத்தை பற்றி பேசிய ஒரு இயக்குனரை கூட இப்போது லைம் லைட்டில் காணவில்லை. (ஒருவேளை தொடர் பவர் கட்டின் காரணமாக இந்த லைட்டும் எரியவில்லையோ என்னவோ?) இந்த முறை பாதிக்கப்பட்டிருப்பதும் ஒரு இயக்குனர்தான். ‘சரவணன் என்கிற சூர்யா’ என்ற படத்தை தயாரித்து இயக்கி அதில் நடித்தும் இருக்கும் ஒரு இயக்குனர் அந்த படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே துடிதுடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு ஆதரவாக ஒரு குரலும் எழவில்லை இங்கே.

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற படத்தை தயாரிக்கும் ஜி.வி.பிரகாஷ், இந்த படத்திற்கு ஆட்சேபணை தெரிவிக்க மாட்டீங்கதானே? என்று மேற்படி நடிகைகள் இருவரிடமும் கேட்க, ‘சேச்சே… நாங்க ஒண்ணும் அவ்வளவு மோசமில்லே’ என்று கூறிவிட்டார்கள் அவர்கள். ‘சினேகாவின் காதலர்கள்’ படத்திற்கு எதிராக இதுவரை ஒரு முணுமுணுப்பும் காட்டவில்லை நடிகை சினேகா. இப்படி நடிகைகளுக்கு இருக்கிற பெருந்தன்மை கூட, சூர்யாவுக்கு இல்லையே என்று அதிர்ச்சி விலகாமல் பார்கிறது சினிமா ஏரியா.

சரவணன் என்கிற சூர்யா படத்தின் துவக்க விழாவுக்கு சூர்யாவை நேரில் சென்றே அழைத்திருக்கிறார் அப்படத்தின் இயக்குனர். அப்போது கூட இந்த தலைப்பை மாற்றுங்க என்று கூறவில்லையாம் அவர். இப்போ என்னால வர இயலாது என்று மட்டும்தான் கூறியிருக்கிறார். படம் எடுத்து முடித்த பின்பு அந்த படத்தை முடக்க நினைப்பதும், அதற்கு கருத்து சுதந்திரம் பேசும் படைப்பாளிகள், அச்சத்துடன் அமைதி காப்பதும் வேறெந்த துறையிலும் நடக்காத காமெடி.

ஹ்ம்ம்ம்ம்… இப்படிதான் நகருது கோடம்பாக்கத்தின் கொள்கை டிராபிக்!

Read previous post:
அனுஷ்கா வாழ்த்துக்களுடன் அமர்க்களப்பட்ட விஜய் அமலாபால் நிச்சயதார்த்தம்!

அவரே எழுதிய திரைக்கதையை விட சுவாரஸ்யமாக இருக்கிறது இந்த காதல் கதை. ‘இருவருக்கும் லவ்வாம்...’ என்று கிசுகிசுவில் ஆரம்பித்த காதல், கோலாகலமான நிச்சயதார்த்தம் வரை வந்துவிட்டது. அனுஷ்கா,...

Close