பி.சி.ஸ்ரீராமை அவமதிக்கவில்லை! துண்டு போட்டு தாண்டுது எதிரணி!

‘தேர்தலில் நிற்கும் பி.சி.ஸ்ரீராம்! தோற்கடிக்க துடிக்கும் கோஷ்டி!! மரியாதையே உன் விலை என்ன?’ என்ற தலைப்பில் நேற்று ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். ஒளிப்பதிவாளர் சங்கத் தேர்தல் முஸ்தீபுகளில் மூன்று அணியாக பிரிந்து மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் உறுப்பினர்களுக்கு இடையே நமது செய்தி என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தியதோ, தெரியாது. ஆனால் ஏராளமான போன் கால்கள். விளக்கங்கள்…!

பெப்ஸி சிவாவுக்கு ஆதரவாக நம்மிடம் பேசிய சிலர், துண்டு போட்டு தாண்டாத குறையாக சில விஷயங்களை மறுத்தார்கள். அதில் முதல் விஷயம் இதுதான். “பி.சி.ஸ்ரீராம் சார் மீதும், ராஜீவ் மேனன் சார் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருப்பவர் சிவா. இந்த தேர்தலில் அவர் போட்டியிட வந்ததே எதிர்பாராத ஒன்று” என்பதுதான் அது! இது குறித்து அவர்கள் தரும் மேலதிக விளக்கம் இதுதான்.

“எங்கள் சங்கத்திற்குள் எவ்வித பிரிவும் இல்லை. நாங்கள் எல்லாரும் ஒன்றுதான். இந்த முறை தேர்தலே வேண்டாம் என்றுதான் நாங்கள் நினைத்திருந்தோம். பி.சி.ஸ்ரீராம், ராஜீவ்மேனன் போன்ற மரியாதைக்குரிய ஒளிப்பதிவாளர்களுக்கே பொறுப்பை வழங்கி அவர்களை பதவியில் உட்கார வைத்து அழகு பார்க்க வேண்டும் என்றுதான் முதலில் நினைத்தோம். ஆனால் பி.சி சாருக்கு எதிராக வேறொரு புதுக் குழு தேர்தலில் நின்றார்கள். சங்கத்தில் வெறும் ஒரு லட்ச ரூபாய் நிதி இருக்கும் போது உள்ளே வந்தவர் பெப்ஸி சிவா. அவர் பொறுப்புக்கு வந்த பின்புதான் சங்கத்திற்கு கோடி கோடியாக நிதி வசூலித்தோம். இந்த நிலையில் யாரோ சிலரின் தூண்டுதலின் பேரிலும், சங்கத்தின் ஒற்றுமையை குலைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் உள்ளே வந்தவர்களை எப்படி விட முடியும்? அதனால்தான் நாங்களும் தேர்தலில் நிற்கிறோம் என்று இறங்கினார் சிவா. இப்போது மும்முனை போட்டியாகிவிட்டது” என்று நீண்ட விளக்கத்தை கூறினார்கள் பெப்ஸி சிவா ஆதரவாளர்கள்.

இது ஒருபுறமிருக்க, ஒரு முன்னணி சேனல் ஒன்றும் கொல்லை புறமாக மூக்கை நுழைக்கிறதாம். அவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றை ஒளிப்பதிவாளர் சங்கம் வேறு ஒரு முக்கிய காரணத்தால் புறக்கணித்ததை மனதில் வைத்துக் கொண்டு, ஒரு அணிக்கு ஆதரவாக ஏராளமான பணத்தை அள்ளி விடுகிறதாம்.

குட்டி ஆட்டை அடிச்சி, அம்மா ஆட்டுக்கே பிரியாணி போட்ற உலகம் இது. பார்த்து சூதானமா ஓட்டுப் போடுங்க உறுப்பினர்களே…!

Read previous post:
வேதாளம் ஸ்பெஷல் -2 சிவா… இத்தனை வருஷ தப்புக்கு ஒரு பரிகாரம் வேணும்! அஜீத் ஆசையை வேதாளத்தில் நிறைவேற்றிய சிவா?

ஒரு வீட்டில் ஒரு ஆண் குழந்தை படித்தால், அந்த குடும்பம் தழைக்கும்! ஒரு வீட்டில் ஒரு பெண் குழந்தை படித்தால் அந்த தலைமுறையே தழைக்கும்! இது ஒன்றும்...

Close