‘வீ குடும்ப உத்சவம் 2014’


ட்வைலைட் கிரியேஷன்ஸ் சார்பில் ‘வீ குடும்ப உத்சவம்’ பொருட்காட்சி ஏழாம் ஆண்டாக சென்னை வர்த்தக மையத்தில் வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 19ஆம் தேதி (2014) தொடங்கியது., ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 21ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இந்த உத்சவம் பெண்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான பொருட்காட்சியாகும்.

இந்த ‘வீ குடும்ப உத்சவம்’ பொருட்காட்சியில் சுமார் 120க்கு மேற்பட்ட வணிக பெண் விற்பனையாளர்கள் கலந்துக் கொண்டார்கள். குடும்பத்துடன் வந்து அனைவருக்கும் தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல அனைத்து வசதிகளுடன் கூடிய பொருட்காட்சியாகும். அதாவது ஆடைகள் முதல் குழந்தைகளுக்கான பொருட்கள் வரை… பட்டு புடவைகள் முதல் ஹனிமூன் செல்ல சுற்றுலா மையங்கள் வரை, கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் வீட்டுக்கு தேவையான அலங்கார பொருட்கள், மின்னணு பொருட்கள், பிரபலமான இரண்டு சக்கர வாகனங்களும், பெண்களுக்கான பிரத்யேக பட்டுப் புடவைகள், நவநாகரீக உடைகள், அணிகலன்கள், அழகு சாதனங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு ஓவியங்கள், பொருட்கள், அறுசுவை உணவு வகைகள், ஆடைகள், பரிசுப்பொருட்கள் மற்றும் பலதரமான பொருட்கள் ஒரு குடையின் கீழ் மக்கள் மனம் கவரும் வகையில் இந்த ‘வீ குடும்ப உத்சவம்’ பொருட்காட்சியில் கிடைக்கும். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பல விளையாட்டு போட்டிகளும் பரிசுகளும் இந்த பொருட்காட்சியில் இடம்பெற்றன.

இந்த பொருட்காட்சி தொடக்கவிழா வெள்ளி, செப்டம்பர் 19ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் நடைபெற்றது.. இவ்விழாவிற்கு பிரபல தொழிலதிபர் திரு ஆனந்த் பழனிச்சாமி (Chairman, AP Group Coimbatore), திருமதி பூர்ணிமா பாக்யராஜ், திருமதி சுமதி ஸ்ரீனிவாஸ்(சி.ஈ.ஓ, ட்வைலைட் கிரியேஷன்ஸ்) திரைப்பட நடிகைகள் செல்வி ஐஸ்வர்யா, நீலிமா, ஆகியோர் வருகை தந்து குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்கள்..

இது குறித்து ட்வைலைட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூத்த செயல் அதிகாரியான திருமதி சுமதி ஸ்ரீனிவாஸ் கூறுகையில் “இந்த ‘வீ குடும்ப உத்சவம் 2014 ‘ பொருட்காட்சிக்கு வருபவர்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கிச் செல்லும் சிறந்த இடமாக இருக்கும் என்று கூறுவது மிகையாகாது. அந்த அளவிற்கு அவர்களின் தேவைகளை தெரிந்து உணர்ந்து அதற்கேற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சியில் ஏழை, எளிய குழந்தைகளின் கல்விக்காக ‘சோல்மேட்ஸ் ஃபவுண்டேஷன்’ மூலமாக நீதி திரட்ட உள்ளோம்” என்றார்.

Read previous post:
மைந்தன் – விமர்சனம்

தமிழ்சினிமாவின் அகன்ற சந்தைகளில் ஒன்று மலேசியா! மலேரியா வரவழைக்கும் நம்ம ஊரு மொக்கை படங்களை கூட, மலேசியாவில் கொண்டாடுவார்களாம் தமிழர்கள். ‘நம்ம ஆளுங்க எடுத்த படம். ஓட்டிருவோம்டா...’...

Close