நட்பு நட்புங்கிறாங்களே, அது சுரண்டல் லாட்டரியை விட மோசமா இருக்கேப்பா?

தமிழ்சினிமாவில் டேக் இட் ஈஸி ஹீரோ என்றால் அது ஆர்யாதான். ‘வந்தா மல, வரலேன்னா விடுலே…’ என்கிற டைப் அவர். கிசுகிசு எழுத்தாளர்கள் ஊற்றிய சாம்பாருக்கெல்லாம் இந்நேரம் அவர் மிளகாய் பொடியாகவே வாந்தி எடுத்திருக்க வேண்டும். அதற்கும் டேக் இட் ஈஸி என்பதுதான் ஆர்யாவின் அழகு, லட்சணம், புகழ், பெருமை இத்யாதி… இத்யாதி…

“யாரு கூப்பிட்டாலும் போய் கெஸ்ட் ரோல் பண்றீங்களே? அது உங்க ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாதா?” என்று சமீபத்தில் அவரை கேட்டபோது, “ஃபிரண்ட்ஸ் கூப்பிடுறாங்க. என்னால அவங்களுக்கு ஏதோ நல்லது நடக்குதுன்னா அதை எத்தனை முறை வேணும்னாலும் செய்வேன்” என்றார் ஆர்யா. முன்பெல்லாம் ஒரு ஹீரோவும் இன்னொரு ஹீரோவும் எதிரெதிரே வந்தால் கூட முகத்தை திருப்பிக் கொள்கிற வழக்கம் இருந்தது. அந்த வழக்கத்தையெல்லாம் தூக்கி போட்டு மிதித்தது ஆர்யாவின் கூட்டணிதான். நிற்க… ஏனிந்த பில்டப்? விஷயம் இல்லாமலா?

கே.வி.ஆனந்த் ரஜினியை வைத்து படம் பண்ண போகிறார். அஜீத்தை வைத்து படம் பண்ண போகிறார் என்றெல்லாம் தகவல் பரவி, பரவிய வேகத்திலேயே பஸ்பம் ஆகிவிட்டது. கடைசி கடைசியாக சிவகார்த்திகேயன்தான் என்றார்கள். அதுவும் சம்பந்தப்பட்ட இருவராலும் மறுக்கப்பட்டுவிட்டது. இந்த நேரத்தில்தான் மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்காக ஒரு படம் இயக்குகிறார் கே.வி.ஆனந்த். இதில் ஆர்யாதான் ஹீரோ. (இதற்கு மறுப்பு வர வாய்ப்பில்லை. ஏனென்றால் அரை கிணறு தாண்டிவிட்டார்கள் எல்லாரும்) இந்த நேரத்தில்தான் ஆர்யாவின் திக் பிரண்ட், உயிர் பிரண்ட், கூட்டணி பிரண்ட் ஜெயம் ரவி ஒரு பக்க சக்கரத்தின் கடையாணியை பிடுங்க ட்ரை பண்ணுகிறார் என்கிறது சொரேர் தகவல்கள்.

சமீபத்தில்தான் ஜெயம் ரவி, மோகன்ராஜா, ஏஜிஎஸ். கூட்டணியில் வெளிவந்த ‘தனி ஒருவன்’ பம்பர் ஹிட்டடித்திருக்கிறது. மீண்டும் அதே நிறுவனத்தின் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறாராம் ரவி. அதுவும் கே.வி.ஆனந்த்தே டைரக்டர் என்றால் கசக்கவா போகிறது? சம்பந்தப்பட்ட பட நிறுவனத்திடம், “சார்… ஆர்யாவை வச்சு நீங்க வேற படம் எடுங்க. ஆனால் இந்த படத்தில் நான் நடிக்கிறேன்” என்று வற்புறுத்துகிறாராம். விஷயம் தெரிந்தால் விட்டுக் கொடுத்துவிட்டு போய் விடுகிற டைப்தான் ஆர்யா.

அதற்கு கே.வி.ஆனந்த் சம்மதிக்கணுமே? (ஆமாம்… நட்பு நட்புங்கிறாங்களே, அது சுரண்டல் லாட்டரியை விட மோசமா இருக்கேப்பா?)

Read previous post:
TIN – ‪#‎YennachuYedhachu‬ Making video Link

https://www.youtube.com/watch?v=2DY4rzXXbDQ

Close