சவுந்தர்யா டைவர்ஸ்! எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு சம்பவம்தான்!

கரை புரண்டோடும் கபாலி சந்தோஷத்தை இன்னும் கூட முழுசாக அனுபவித்து முடிக்கவில்லை ரஜினி. அதற்குள் நுரை தள்ள வைக்கும் செய்திகளால் அப்செட் ஆகியிருக்கிறார் அவர். “தமிழ்சினிமாவின் பொக்கிஷத்தை இப்படியா போட்டு புரட்டி எடுப்பீர்கள்?” என்று அவரது குடும்பத்தினர் மீது சற்றே கவலை கொள்ளவும் செய்கிறது ரஜினியின் மீது மாறா அன்பு கொண்டிருக்கும் ரசிகர்களின் உலகம்.

ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா, தனது கணவர் அஸ்வினுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார். கடந்த இரண்டு மூன்று நாட்களாக அரசல் புரசலாக கசிந்து வந்த செய்தியை, உறுதி படுத்தியிருக்கிறார் அவரே! விரைவில் குழந்தைகளுக்கான படம் ஒன்றை இயக்குகிற வேலையில் பிசியாக இருந்து வந்த சவுந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் என்னதான் பிரச்சனை?

குடும்பம் என்றால் சண்டை சச்சரவுகள் இருக்கதான் செய்யும். ஆனால் இந்த சண்டை, பெரும் சண்டையாக மாறியதற்கு காரணம், அந்த ஒரு நாள்தான் என்று காதை கடிக்கிறது இன்டஸ்ட்ரி. என்னவாம்? கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் நடந்த ஒரு திருமண வரவேற்பு விழாதான் இதற்கெல்லாம் காரணம். அருண் விஜய்யை ஆக்சிடென்ட் வழக்கில் சிக்க வைத்த அதே சூடோடு இந்த தம்பதியின் பிரிவுக்கும் பிள்ளையார் சுழி போட்டுவிட்டது அந்த நிகழ்ச்சி. அங்கு நடந்த ஒரு சம்பவத்தை கேள்விப்பட்ட அஸ்வின், அதற்கப்புறம்தான் இந்த டைவர்ஸ் முடிவுக்கே வந்ததாகவும் கூறுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.

அந்த திருட்டுப் பூனை இன்னும் எத்தனை எத்தனை தயிர் பானைகளை உடைக்கக் கிளம்பியிருக்கோ?

To listen the audio click below :-

 

3 Comments
  1. Unmai says

    appo Arun Vijaykkum, soundaryavukkum kalla thodarbaa?

  2. Kara saram says

    Varun manian, jayam Ravi, simbu or dhanush one of them is the black ship….but don’t know whether Varun and dhanush attended the function

    1. Roja says

      Yappa why this much option only one option than illaya star than. Avan etho planil than irukkiran

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பகிரி விமர்சனம்

மனசுக்கு நெருக்கமா மது பாட்டிலும், கைக்கு நெருக்கமா கடை வாசலும் இருந்தால் தமிழ்நாடு உருப்படுமாடா? ‘நாடு நல்லாயிருக்கணும்’ என்று நினைக்கிற ஒவ்வொருவரும் ஒரே நாளில் மதுக்கடைகள் குளோஸ்...

Close