சன்னி லியோனுக்கும் மே-13க்கும் என்ன சம்பந்தம்…
எப்டி விளம்பரம் செய்தால் மக்களிடம் ஈசியாக ரீச் ஆகலாம்? இதுதான் அரசியல்வாதிகளிடமிருந்து சினிமாக்காரர்கள் வரைக்குமான சிந்தனையாக இருக்கிறது. ஒரு புறம் சமூக வலைதளங்களில் மீம்ஸ் வகை இம்சைகளால் அரசியல்வாதிகளின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர். வேறு சிலர் வேறு மாதிரியான டெக்னிக்குகளால் திணறடிக்கிறார்கள். அந்த வகையில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி என்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு போஸ்டர், சினிமா மற்றும் அரசியல் போஸ்டர்களை விட, பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மே 16 தேர்தல், ஆனா, மே-13 என்ன? இதுதான் அந்த போஸ்டரிலிருக்கும் வாசகம். இப்படி ஒரு கேள்வியை கேட்டு களேபரம் செய்திருக்கும் அந்த மர்ம நபர்கள் யார்? அந்த போஸ்டர் என்னவாக இருக்கும்? இது அரசியல் சம்பந்தப்பட்டதா, அல்லது சினிமா சம்பந்தப்பட்டதா, அல்லது வேறு ஏதாவது கடை திறப்பு விழாவா? இப்படி குழம்பிய மக்கள் அது குறித்து விவாதித்து வருகிறார்கள்.
இதற்கிடையில இந்த மே-13க்கும் சன்னி லியோனுக்கும் எதோ சம்பந்தம் இருக்கு என்று பேசுகிறவர்களையும் பார்க்க முடிகிறது.
முக்கிய குறிப்பு:
இந்த மே-13ன்னா என்னன்னு உங்களுக்கு உள்ளபடியே உண்மை தெரிஞ்சிருந்தா அதை ஊர் உலகத்துக்கு தெரியப்படுத்தாமல் சில தினங்களுக்கு ரகசியமாக வைத்திருக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அதோடு மறக்காமல் தங்கள் செய்திப் பதிவில் சன்னி லியோனை பயன்படுத்துறீங்களோ இல்லையோ, ஆனா இந்த போஸ்டரை பயன்படுத்திக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
உங்களுக்கு நல்லா தெரிஞ்ச யாரோ.