லைக்கா நிறுவனத்தால் விஜய்யை தொடர்ந்து வளைக்கப்படும் மற்றொரு ஹீரோ?

அதிர்ச்சி…! ஆனால் தகவல் கசியும் திசை நம்பிக்கை திசை என்பதால்தான் இந்த விவகாரத்தை ஊருக்கு டமாரம் அடிக்க வேண்டியிருக்கிறது.

‘கத்தி’ படத்தை தயாரிப்பது ராஜபக்சேவின் நண்பரான சுபாஷ்கரண் அல்லிராஜாதான் என்பது நிரூபணம் ஆகி, அந்த பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலைகள் கன ஜோராக நடந்து வருகிறது. படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழகத்திலிருக்கும் தமிழீழ ஆதரவாளர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார். லண்டனிலிருந்து லைக்கா நிறுவன அதிபரும் சென்னை வரப்போவதாக தகவல். பணத்தை பல்க்காக வைத்துக் கொண்டு படமெடுக்க இறங்கியிருக்கும் இவர்களால் கோடம்பாக்கத்திற்கு கொண்டாட்டம்தான். அதே நேரத்தில் ‘இந்த புலி வலி’ என்று பாழாய் போனவர்கள் கிலியேற்படுத்துகிறார்களே என்று சபித்துக் கொண்டிருக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

இலட்சங்களுக்கு முன்பு இன உணர்வாவது ஒண்ணாவது என்று அவர்கள் தங்களது மனசாட்சியை சேவல் கோழியை போட்டு அமுக்குவது போல அமுக்கினாலும் திமிறிக் கொண்டு சிலர் கிளம்புவார்கள்தானே? அப்படிதான் கிளம்பியிருக்கிறாராம் அந்த தயாரிப்பாளரும். விஜய்க்கு இணையான ஒரு ஹீரோவை வைத்து அவர் தற்போது ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை பல்க் ஆக வாங்கிக் கொள்ள கேட்டுதான் லண்டன் கிளம்பினாராம் அவர். என்ன காரணத்தாலோ அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிகிறது. இந்த படத்தை லைக்கா பேனரில் வெளியிட வேண்டாம். வேறு பெயரில் வெளியிடுங்கள். ஆனால் பணத்தை முன் கூட்டியே சிங்கிள் பேமென்ட்டாக கொடுத்துவிடுங்கள் என்றெல்லாம் பேரம் பேசப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்வளவும் அந்த படத்தின் ஹீரோவுக்கு தெரியுமா? இல்லையா? என்கிற பேச்சுக்கே இடம் இல்லை. ஏனென்றால் நடித்துக் கொடுப்பதோடு தன் வேலை முடிந்தது என்று நேர் வாழ்க்கை வாழ்கிறவர் அவர். படத்தை யாரிடம் விற்றாலும் ஏன் எதற்கு என்றும் கேட்கப்போவதில்லை. ஆனால் லைக்கா என்றால் அவரே ஜர்க் ஆகக் கூடும்.

இருந்தாலும், ‘……’க்கு வந்தது தலை பாகையோடு போகட்டும் என்பதுதான் நமது ஆசை.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சண்டியர் விமர்சனம்

‘மதுரக்காரங்க அருவாளுக்கு மட்டும்தான் மருதாணி கலரா? எங்களுக்கும்தான்’ என்று தஞ்சாவூர் காரர்கள் கிளம்பினால் எப்படியிருக்கும்! அதுதான் ‘சண்டியர்’. அறிமுகமில்லாத நடிகர்கள், ஆற்றில் நெளியும் மீனை போல அசால்ட்டாக...

Close