அதுக்கு நான் இசையமைக்கலே! – அனிருத் அனிருத்துதான் இசையமைத்தார்! -டி.ஆர்
இது அடுத்த காமெடி! ‘ஆத்தோட அடிச்சுட்டு போனாலும் அத்த மகளோட போகணும்’னு முடிவெடுத்த பின்னால, போனாப் போவுதுன்னு வுடறதா? அனிருத்தையும் சேர்த்து பிடிச்சு வலிச்சுட்டாரு டி.ஆர். நேற்று அடுத்தடுத்து வந்த இருவரது அறிக்கையை படித்தவர்கள், அவங்க முதுகை அவங்களே பார்க்குற அளவுக்கு தலைசுற்றி போனார்கள். ஏன்? அறிக்கையிலிருந்த குழப்பம் அப்படி.
கனடாவிலிருக்கும் அனிருத் அங்கிருந்தபடியே ஒரு விளக்கத்தை அனுப்பியிருந்தார். அதில் பிரச்சனைக்குள்ளாகியிருக்கும் அந்த பாடலுக்கு நான் இசையமைக்கல. பாடல் வரிகளையும் நான் எழுதல. பாடல… என்று கட் அண்டு ரைட்டாக சொல்லிவிட்டார். அது மட்டுமல்ல, நான் பெண்களை மிகவும் மதிப்பவன் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு நேர்மாறாக சிம்புவின் அப்பா டிஆர் ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
அதில் இந்த பாடலுக்கு இசையமைத்தவர் அனிருத் என்றும் அந்த பாடலை பாடியது சிம்பு என்றும் கூறியிருக்கும் அவர், யாரோ வாட்ஸ் அப்பிலிருந்து இந்த பாடலை திருடி, அந்த குறிப்பிட்ட வார்த்தையை மட்டும் சிம்பு குரலிலேயே உள்ளே சேர்த்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார். அந்த கருப்பு ஆடு யாரென்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி அவர் காவல் துறை ஆணையரிடம் ஒரு புகார் கொடுத்திருக்கிறார்.
இப்படி மாறி மாறி மல்லுக்கட்டும் இவர்களை பார்த்து நாடே சிரிக்கிறது!
இதற்கிடையில் போலீஸ் தன்னை கைது செய்துவிடும் என்று அஞ்சிய சிம்பு, தலைமறைவாகியிருக்கிறார். அனிருத் ஏர்போர்ட்டில் காலடி எடுத்து வைக்கும் போது (போலீஸ் நியாயமாக நடந்து கொண்டால்) கைது நடவடிக்கை இருக்கக் கூடும்!
இந்த இருவரையும் சட்டம் மிக கடுமையாக தண்டிக்க வேண்டும். இருவர் மீதும் வழக்கு போட்டு ஒரு 5 ஆண்டுகள் வெளியே வரமுடியாமல் சிறையில் அடைக்க வேண்டும். அப்பவாவது புத்தி வந்து திருந்துவார்களா என்பது சந்தேகம் தான். இவ்வளவு நடந்த பிறகும் ஒரு மன்னிப்பு / வருத்தம் தெரிவித்து அறிக்கை கூட வெளியிடவில்லை என்றால் இவர்கள் இருவருக்கும் என்ன ஒரு துணிச்சல் இருக்கும் ??? தமிழ் பெண்கள் என்றால் கிள்ளுகீரை என்று நினைத்து விட்டார்கள் போலும். சிறையில் தள்ளி முட்டிக்கு முட்டி தட்ட வேண்டும். இந்த விஷயத்தில் ஆண் , பெண் என்ற பாகுபாடு பார்க்காமல் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இவர்கள் இருவரையும் புறந்தள்ள வேண்டிய நேரமிது.