நயன்தாராவா? டி.ராஜேந்தரா? யார் பக்கம் நிற்கும் நடிகர் சங்கம்?

பழசுகளுக்கு வெள்ளையடிக்கும் காலம் இது போலிருக்கிறது டி.ஆர் பேமிலிக்கு! சிம்புவால் கெட்டுப்போன… விட்டுப்போன… படங்களையெல்லாம் தூசு தட்டி, சுண்ணாம்பு அடித்துக் கொண்டிருக்கிறார். வாலு படத்தை எப்படியோ சொந்த பணத்தை இறைத்து ரிலீஸ் செய்துவிட்டார். அது வெற்றியா? தோல்வியா? என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஏனென்றால் அந்த படம் 100 கோடியை வசூலித்தால் கூட சிம்புவின் இழப்பீடுக்கு டேலி ஆகுமா தெரியாது. அதற்கு வாய்ப்பு இல்லை அல்லவா?

அதற்கப்புறம் கண்டு கொள்ளாமலே விட்டிருந்த இது நம்ம ஆளு படத்தை கையில் எடுத்திருக்கிறது சிம்பு பேமிலி. இந்த படத்தின் தயாரிப்பாளர் டிஆராக இருந்தாலும், முதல் பிரதி அடிப்படையில் படத்தை முடித்துக் கொடுக்க முன் வந்தவர் டைரக்டர் பாண்டிராஜ். அந்த வகையிலேயே கிட்டதட்ட ஒரு கோடி தர வேண்டியிருக்கிறதாம் பாண்டிராஜுக்கு. அந்த பஞ்சாயத்தை அப்புறம் வைத்துக் கொள்ளலாம். முதலில் இந்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகளுக்கு கால்ஷீட் தர வேண்டிய நயன்தாரா முடியவே முடியாது என்று ஓடுகிறார் அல்லவா? அவரை வழிக்கு கொண்டு வருவோம் என்று கதகளி ஆடுகிறார் டிஆர்.

ஐம்பது லட்சம் சம்பள பாக்கி நயன்தாராவுக்கு. கதைப்படியே ஒரு பாடல்தான் எடுக்க வேண்டுமாம். டிஆர் இரண்டு பாடல்கள் என்று சொல்வதிலும் ஒரு ட்ரிக் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு பாடலுக்கு 25 லட்சத்தை முதலில் வாங்கிட்டு ஆடிக் கொடுக்கட்டும். இன்னொரு பாட்டுக்கு ஆடும்போது மீதி 25 லட்சத்தை கொடுத்துவிடுகிறோம் என்று பேசினார்களாம். ஒரு பாடலோடு படத்தையே முடித்துவிட்டால் 25 லட்சம் அம்போவாகிவிடும் என்பது தெரியாதா நயன்தாராவுக்கு?

50 லட்சத்தை முழுசா கொடுத்தால்தான் வருவேன் என்கிறார். இதுவரை 10 முறைக்கும் மேல் கால்ஷீட் கொடுத்து கேன்சல் ஆகியிருக்கிறதாம் ஷுட்டிங். அதையும் சகித்துக் கொள்ள தயாராக இல்லை நயன்.

நடிகர் சங்கம் யார் பக்கம் நிற்கும்? நிச்சயம் நயன்தாரா பக்கம்தான் நிற்கும் என்கிறார்கள். ஏனென்றால் நிஜ நிலவரத்தைதான் புட்டு புட்டு வைக்கிறாரே படத்தின் இயக்குனர் பாண்டிராஜ்?

Read previous post:
சிவகார்த்திகேயன் படம் தாமதம் ஆவது யாரால்?

இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்கள் அத்தனை பேரும் ஒளி மேதை ஸ்ரீராமின் சிஷ்யர்கள்தான். இந்த ஒரு பெருமை போதாதா அவர் யார் என்பதை சொல்ல? அவ்வளவு பெரிய டெக்னிஷியனே...

Close