எதுக்கு மச்சான் காதலு?

வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை என்று வரிசையாக சிவகார்த்திகேயன் படங்களாக வெளியிட்டு அவருக்கு வெற்றிக்கனி பறிக்க உதவிய நிறுவனம் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம். இவர்களை பொறுத்தவரை சிவகார்த்திகேயன் வீட்டோட மாப்பிள்ளை! சொன்ன நேரத்தில் அழைக்கிற உரிமை அவர்களுக்கும் உண்டு. கேட்காமலே ஓடிச்சென்று உதவுகிற உரிமை சிவகார்த்திகேயனுக்கும் உண்டு.

இந்த நேரத்தில் அந்த விஷயம் நடக்காமலிருந்தால்தான் ஆச்சர்யம். காக்கி சட்டை படத்திற்கு பிறகு எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்நிறுவனம் தயாரித்து வரும் மாப்பிள்ளை சிங்கம் படத்தில் விமல், அஞ்சலி, சூர்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒரு முறை ஷுட்டிங் ஸ்பாட்டுக்கே போய் நண்பர்களை வாழ்த்திவிட்டு வந்தார் சிவா. அந்தளவுக்கு நெருக்கத்திற்குள்ளான இந்த படத்திற்காக அவர் ஒரு பாடல் கூட பாடாவிட்டால் எப்படி?

அனிருத், விமலுடன் இணைந்து ‘எதுக்கு மச்சான் காதலு’ என்ற பாடலை பாடியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ரஹ்நந்தன் இசையமைத்திருக்கிறார். இந்த பாடல் உருவான காட்சியை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்தார். கேட்கும்போதே சும்மா ஜம்முன்னு இருக்குல்ல?

கேட்டுட்டு சொல்லுங்க மக்களே…

பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும் https://youtu.be/etg3MHFEoZQ

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எதிரியா இருந்தா எனக்கென்ன? மணிரத்னம் முடிவால் அதிர்ச்சி!

எலி இளைச்சாலும் பல்லு ஸ்டிராங்குன்னு கடைசியா நிரூபிச்சிட்டார் மணிரத்னம். சமீபகாலமாக படு சறுக்கலில் இருந்த மணிரத்னத்தின் இமேஜ் மறுபடியும் எழுந்து நின்று விட்டது. எல்லாவற்றுக்கும் ஓ காதல்...

Close