முருகதாஸ் மருத்துவமனைக்கு போனது ஏன்? -படபடக்கும் தகவல்களால் பதற வைக்கும் கோடம்பாக்கம்

மயக்கம் அடித்து விழுகிற அளவுக்கு எதை சாப்பிட்டாரோ? இந்த நிமிடம் வரைக்கும் ஏ.ஆர்.முருகதாசுக்கு ஃபுட் அலர்ஜி என்றே கூறிவருகிறார்கள். அடையாறில் அமைந்திருக்கும் பிரபல மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார் ஏ.ஆர்.முருதாஸ். அவரை பிரபல ஹீரோக்கள் அஜீத், விஜய், சூர்யா ஆகிய மூவரும் சென்று பார்த்து உடல் நலம் விசாரித்திருக்கிறார்கள்.

ஒருபுறம் கத்தி பஞ்சாயத்து, மறுபுறம் அதே படத்தின் ஷுட்டிங் என்று இருந்ததால்தான் அவருக்கு பிரஷர் ஏறி உடல் நலம் சரியில்லாமல் போனது என்கிறார்கள் சிலர். அதே நேரத்தில் இன்னொரு புறம் சொல்லப்படும் தகவல் நம்ப முடியாவிட்டாலும், இருக்கிற சூழ்நிலையை பார்த்தால் நம்பிதான் ஆக வேண்டியிருக்கிறது. நீதிமன்றம் கத்தி படத்தின் ஸ்கிரிப்டை ஒப்படைக்க சொல்லியிருக்கிறது. ஆனால் படத்தின் கதை வசனத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் எண்ணத்தில் இல்லை முருகதாஸ். அப்படி ஒப்படைத்தால் அது தனக்கே சிக்கலாக வந்து முடியும் என்று நினைத்திருக்கலாம். அவர் தற்போது ஷுட் பண்ணி வரும் பகுதிகளே மீஞ்சூர் கோபியின் ஸ்கிரிப்ட் அப்படியே இருக்கிறது என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காகதான் என்றும் கூறப்படுகிறது. ரிலீஸ் நேரத்தில் படத்தை பார்க்க நீதிமன்றம் விரும்பினால், காட்சியமைப்புகள் மாறியிருக்க வேண்டுமல்லவா?

அவர் மருத்துவமனையில் படுத்துக் கொண்டதற்கு காரணம், வருகிற 15 ந் தேதி கத்தி படத்தின் வழக்கு மீண்டும் நீதிமன்றத்திற்கு வருகிறது. அதற்கு முன்பாகவே ஸ்கிரிப்டை கொடுத்தால்தான் நீதிபதி படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வருவார். உடல் நலத்தை காரணம் காட்டி ஸ்கிரிப்ட் கொடுப்பதை தள்ளிப்போடலாம். நீதிமன்றம் இன்னொரு தேதியை அறிவிக்கும். அதற்குள் இந்த கதை பிரச்சனையையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்பதுதான் முருகதாசின் கணக்கு என்கிறார்கள் இந்த விஷயத்தை மேலோட்டமாக பார்க்கும் திரையுலகத்தினர்.

தமிழ்சினிமாவிலிருக்கும் முக்கியஸ்தர்கள், பஞ்சாயத்துகளை தீர்த்து வைக்கும் வல்லவர்கள் பலரும் கதை திருட்டு புகார் கொடுத்த மீஞ்சூர் கோபியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார்களாம்.

பூனை எந்த பக்கம் வேண்டுமானாலும் குதிக்கக் கூடும் என்பதுதான் இப்போதைய நிலவரம்.

Read previous post:
இசையமைப்பாளர் ஆகிறார் ஆன்ட்ரியா?

கம்ப்யூட்டர் மியூசிக் வந்த பின்பு கர்நாடகமாவது? சங்கீதமாவது? தற்போதைய சூழ்நிலையில் ஆளாளுக்கு கீபோர்டை அமுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சிலரது இசை தேன். சிலரது இசை தேள் கொடுக்கை விடவும்...

Close