அஜீத் பட ஷுட்டிங் நின்றதற்கு காரணம் ஸ்ருதியுமில்லை, சிவாவுமில்லை! பிறகென்னவாம்?
எவ்வளவு பெரிய டாப் நடிகர்களின் படமாக இருந்தாலும், தண்டவாளத்தில் கப்பல் விட்ட கதையாக விழி பிதுங்கி நிற்பது தயாரிப்பாளர்தான். ஆனால் அஜீத் நடித்து வரும் புதிய படத்தின் ஷுட்டிங் நின்று முழு பிரேக்கில் இருக்கிறார் அவர். அதற்கு யார் காரணம்? ஒருவருக்கொருவர் சொல்ல முடியாமல் மென்று துப்பிக் கொண்டிருக்கிறார்களாம். பழியை தூக்கி இப்போதைக்கு ஸ்ருதி மீதும், படத்தின் இயக்குனர் சிவா மீது போட்டு வந்தாலும் நிஜமே வேறு என்கிறது நமக்கு கிடைக்கிற ரகசிய தகவல்கள்.
இந்த படத்தில் அஜீத்தை தவிர மீதி அத்தனை பேருக்கும் சம்பளம் சரிவர சென்று சேர்வதில்லையாம். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழந்தாலும், படத்தை முடித்துக் கொடுப்பதுதானே நல்ல கலைஞர்களுக்கு அழகு என்பதால் அவரவர், அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். ஒரு கட்டத்தில், படத்தின் டைரக்டரான சிவாவே தன் கையிலிருந்து பணத்தை போட்டு படப்பிடிப்பு செலவுகளை பார்த்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் அவரும் கையை பிசைய வேண்டிய சூழ்நிலை. படப்பிடிப்பை நிறுத்திவிட்டார்கள்.
இதற்கு காரணமாக மழையையும், ஸ்ருதியின் கால்ஷீட்டையும் சொல்லி வரும் அவர்கள், நிஜத்தை சொன்னால் அது அஜீத்தின் இமேஜையும் சேர்த்து பாதிக்கும் என்பதால் சுற்றி வளைத்து மழுப்புகிறார்களாம். “என்னதான்யா நடக்குது?” என்று அஜீத் கொந்தளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
திமிங்கலத்துக்கு தீனி போடணும்னா சும்மாவா?