ஏன் வழக்கு போட்டேன்? சிம்பு விவகாரத்தில் பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி விளக்கம்! (வீடியோ)
சிம்பு மீது நாடெங்கிலும் இருந்து பல்வேறு வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால் இப்பவும் நான் செய்தது சரி என்கிற மனோபாவத்திலேயே அவர் பதில் சொல்லி வருகிறார். நடந்தது தவறுதான். மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்கிற ஒரு பதிலைதான் எதிர்பார்க்கிறது தமிழ்நாடு. ஆனால் ரசிகர்கள் என்ற பெயரில் வீட்டுக்கு அடங்காத வெட்டி பெல்லோஸ் சிலரது ஆதரவு இருப்பதால் அதையே சாஸ்வதம் என்று நம்பி யதார்த்தத்தை புறக்கணித்து வருகிறார் சிம்பு.
இப்பவும் முன் ஜாமீன் கேட்டு மனு செய்திருக்கிறாரே தவிர, மக்கள் மன்றத்தில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கே இடமில்லை என்று போய் கொண்டிருக்கிறது அவரது செயல்பாடு. இந்த நிலையில்தான் துணிச்சலாக செய்திகளை வழங்கி வரும் பத்திரிகையாளர் பிஸ்மி சிம்பு மீதும் அனிருத் மீதும் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்கு ஏன் போடப்பட்டது என்பதற்கான விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார்.
அதன் வீடியோ பதிவு கீழே-