ஏன் வேதாளம் என்று தலைப்பு வைக்கப்பட்டது தெரியுமா?

ஏறியது வேதாளம்! நொறுங்கியது முருங்கை மரம்!! ஒரு படத்திற்கு தலைப்பு வைப்பதையே பெரிய சடங்காக்கிவிட்டார் அஜீத். இதைவிட ஒரு சிறந்த பப்ளிசிடி ஆரம்பத்திலேயே தலைப்பு வைத்திருந்தால் கிடைத்திருக்குமா என்பதெல்லாம் ஐ.நா சபை பில்டிங்கை வாடகைக்கு பிடித்து விவாதிக்க வேண்டிய பெரிய்ய்ய்ய விஷயம். ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுகோளை ஏற்று இப்போதாவது தலைப்பை வைத்தார்களே!

வேதாளம் என்று அஜீத்தின் தல 56 படத்திற்கு பெயர் வைக்கப்பட்டவுடனேயே அது உலகம் முழுக்க இருக்கிற ரசிகர்களை கொண்டாடி ரசிக்க வைத்துவிட்டது. ஒரு தலைப்பு கதை என்னவாக இருக்கும் என்கிற வேட்கையை தூண்ட வேண்டும். அந்த வகையில் மண்டையை பிய்த்துக் கொள்ள வைக்கும் தலைப்புதான் அது. இருந்தாலும் நமது காதுகளை மேயவிட்டதில் கிடைத்த ரகசியம் இது.

ஏன் வேதாளம் என்று தலைப்பு வைக்கப்பட்டது தெரியுமா? அஜீத் மொட்டை கெட்டப்பில் வருகிறாரல்லவா? படத்தில் அந்த அஜீத்தின் பெயர் வேதாளம்! எந்திரனில் கெட்ட ரஜினிக்கு எப்படியொரு ஈர்ப்பு இருந்ததோ? சந்திரமுகியில் வேட்டையனுக்கு எப்படியொரு ஈர்ப்பு இருந்ததோ, அப்படியொரு ஈர்ப்பு இருக்கிறதாம் அந்த வேதாளம் அஜீத்திடம். அதனால்தான் அதையே இந்த படத்திற்கு தலைப்பாக வைத்தவிடலாம் என்று முடிவெடுத்தாராம் சிவா. பல நாள் யோசனைக்கு பின்பு நேற்று இரவு அறிவித்துவிட்டார்கள்.

சாய்பாபாவுக்கு உகந்த வியாழக்கிழமையின் முதல் மணித்துகளில் வைக்கப்பட்டிருக்கிறது தலைப்பு. சாய் ஆசி வேதாளத்திற்கும் கிடைக்கட்டும்…

Read previous post:
உனக்கென்ன வேணும் சொல்லு படத்தில் வரும் நெகிழ்ச்சியான க்ளைமாக்ஸ் (வீடியோ)

https://www.youtube.com/watch?v=8xmTOQMk3Qw

Close