ஸ்டார் கிரிக்கெட் வடிவேலு வராதது ஏன்?

“அட்லீஸ்ட்…. டாஸ்சாவது விண் பண்ணுவோம்னு நினைச்சேன்.. அதுவும் இல்லையா?” சூர்யா டீமை எதிர்த்து களம் இறங்கிய சிவகார்த்திகேயன் கிரிக்கெட் கிரவுண்டில் சொன்ன வார்த்தைகள்தான் இது. “யாரு ஜெயிக்கிறோம் தோக்குறோம்ங்கறது முக்கியமில்ல. நாங்கள்லாம் ஒரு பேமிலின்னு காட்றதுக்காக விளையாடுறோம். ஒரு நல்ல விஷயத்துக்காக விளையாடுறோம்” என்று அநேகமாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லா ஹீரோக்களும் தொலைக்காட்சி மைக்கில் முழங்கிவிட்டார்கள். அப்படி இந்த விளையாட்டை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளாத இவர்கள்தான் கலகல வடிவேலுவை தொள தொளவாக்கி தூர எறிந்துவிட்டார்கள். வடிவேலு கேட்டதை செய்திருந்தால், நேற்றைய நிகழ்ச்சி இன்னும் இன்னும் களை கட்டியிருக்கும்.

என்ன நடந்தது?

சரத்குமார், ராதாரவிக்கு எதிராக எப்போது போர்க்குரல் ஒலிக்க ஆரம்பித்ததோ, அப்போதிலிருந்தே வடிவேலுவின் சப்போர்ட் விஷால் பக்கம் வந்துவிட்டது. அன்றிலிருந்து பல்வேறு சூழ்நிலைகளில் கூடவே நின்று வந்தார் அவரும். தேர்தல் அன்று படு போல்டாக அவர் கொடுத்த பேட்டிகள் எல்லாம், ஆத்திரத்தை உண்டு பண்ணி எதிரணியை கல்லெறிய தூண்டுகிற அளவுக்கு சூடானவை! அதற்கப்புறம் இந்த ஸ்டார் கிரிக்கெட் தொடர்பாக ஒரு நிகழ்ச்சியை சன் தொலைக்காட்சி நடத்திய போதும், அந்த கால நடிகைகளை கண் முன் பார்த்த உற்சாகத்தில் வடிவேலு கொடுத்த பர்பாமென்சும் ஆட்டமும், பாட்டும், அந்த நிகழ்ச்சியை அவ்வளவு லைவ்வாக்கியது.

வடிவேலு இருந்தால் அந்த இடம் நிச்சயமாக ‘கெக்கே பிக்கேதான்’ என்று தெரிந்திருந்தும், நேற்று வடிவேலுவை இழந்தது யார் தவறு? நிச்சயம் நடிகர் சங்க பொறுப்பாளர்களின் தவறுதான். “நானும் ஒரு டீம்ல ஆடுவேன்” என்றாராம் வடிவேலு. “உங்களுக்கு ஆடத் தெரியாதுண்ணே. இங்க ஆடறவங்க எல்லாரும் சீரியஸ் ஆக பிராக்டீஸ் எடுத்துட்டு வந்து ஆடுறாங்க. அதனால் உங்களை பிளேயராக்க முடியாது” என்றார்களாம் இவர்கள். “அப்படின்னா நான் எதுக்கு அங்கே வரணும்?” என்று வடிவேலு ஒதுங்கிக் கொண்டதாக காதை கடிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இது ஒருபுறமிருக்க, சூரிக்கு வாய்ப்பு கொடுத்தவர்கள் தனக்கு கொடுக்கவில்லையே என்கிற ஆதங்கமும் இருந்ததாம் வடிவேலுவுக்கு. கருப்பு தங்கத்தை கதற விட்டுட்டாய்ங்களே….

1 Comment
  1. Roja says

    Please don’t give wrong information. Family member of vadivel is sick in last mint. He even prepared a comedy tract to perform on that day

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஷால் பேர் வாங்கறதுக்கு நான் டைம் செலவு பண்ணணுமா? விஜய்யும் அடித்தார் பல்டி!

கடைசி நேரத்தில் விஜய்யும் காலை வாரி விடுவார் என்று அரசல் புரசலாக கேள்விப்பட்டிருப்பார்கள் போலிருக்கிறது. “இந்த ஸ்டார் கிரிக்கெட் நிகழ்ச்சியில் நீங்க கட்டாயம் கலந்துக்கணும்” என்று கோரிக்கை...

Close