மகனால் வந்த மாற்றம்?

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமூக வலைதளங்களில் புழங்க ஆரம்பித்திருக்கிறார் விஜய். இதற்காக ஒரு டெக்னிகல் குழுவை வைத்துக் கொண்டு அவர் செயல்பட்டாலும், அவ்வப்போது நேரடியாக அதை கண்காணித்து தனது ரசிகர்களிடம் உரையாடுகிற அளவுக்கு நேரம் ஒதுக்கிக் கொள்கிறார். ஏனிந்த திடீர் மாற்றம்? அவரது மகன் சஞ்சய்க்கே இப்போது ட்விட்டர் பேஸ்புக்கெல்லாம் தெரிய ஆரம்பித்திருப்பதுதான்.

அவ்வப்போது மகனின் சமூக வலைதள ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் கவனித்த விஜய் தானாக அதற்குள் ஐக்கியமானாராம். இன்னொன்று… தனது படங்கள் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் ஒரு பெரும் கூட்டம் தனக்கு எதிராக செயல்படுவதால், எல்லாரையும் அரவணைத்துச் செல்லும் முயற்சியாகவும் இது இருக்குமே என்பதால்.

எனி வே… விஜய்யின் இந்த மாற்றம் அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தொடரும் நெருக்கடி… விழி பிதுங்கும் ஐ! 15 கோடி கடனுக்காக ஜனவரி 30 வரை படத்தை வெளியிடவும் தடை!

‘ஜனவரி 15 பொங்கல் வெளியீடு’ என்கிற அறிவிப்புடன் இன்றைய நாளிதழ்களில் ஐ பரபரப்பு துவங்கியது. ஆனால் காலையிலிருந்த கலகலப்பை பிற்பகலில் தொலைத்திருந்தது அதே ஐ டீம்! வேறொன்றுமில்லை....

Close