நடிக்கிற வேலை இல்லேன்னா நடிக்கிறவங்களை கெடுக்கிற வேலையையாவது பார்ப்போம்?
‘நடிக்கிற வேலை இல்லேன்னா நடிக்கறவங்களை கெடுக்கிற வேலையையாவது பார்ப்போமே’ என்று கிளம்பிவரும் ஒரு கூட்டம். அப்படி கிளம்பிய ஒரு கூட்டம்தான் சிசிஎல் என்று சொன்னால் கூட தவறில்லை. அல்மோஸ்ட் சினிமாவில் மார்க்கெட் போனவர்கள் மட்டுமே கலந்து கொண்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் விஷால் ஆர்யாவெல்லாம் உள்ளே வந்ததுதான் ஒரே மர்மம்! இருந்தாலும் வந்த கடமைக்கு தேமே என்று பேட்டை பிடித்துக் கொண்டு நிற்காமல் நிஜமான அக்கறையோடு மேட்சில் பிய்ச்சு உதறிய விஷால், இந்த வருஷ மேட்சில் இல்லை. ஏன்?
‘அந்த விஷயத்தில் ஏதேனும் தனிப்பட்ட தகராறு இருக்குமோ?’ என்றெல்லாம் நிருபர்கள் மூக்கை கூர்மையாக்கிக் கொண்டு அந்த ஏரியாவில் நடமாட…. படக்கென்று அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் விஷால். ‘தொடர்ந்து படங்களில் பிசியா நடிக்க வேண்டியிருக்கு. சொந்தப்படம் எடுத்து வருகிற காரணத்தாலும் என்னால இந்த முறை மேட்சில் கலந்து கொள்ள முடியாது’ என்று கூறியிருக்கிறார். ‘எனக்கு சினிமாதான் முக்கியம்’ என்று அவர் கூறியிருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
‘கோடி கோடியா இவங்களை நம்பி பணத்தை போட்டுவிட்டு, எந்த நேரத்தில் பறந்து வரும் பந்து இவர்கள் மூக்கை பேர்க்குமோ? போட்ட பணம் உருப்படியாக திரும்பி வரணுமே பகவானே’ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த தயாரிப்பாளர்களுக்கு இந்த அறிவிப்பு நிம்மதியாக இருக்கும்.
விஷாலுக்கு பதிலாக இப்போது ஜீவா அந்த இடத்திற்கு வந்திருக்கிறார். வரட்டும்… சாரும் ஃப்ரியாத்தானே இருக்காரு!