சிம்பு மாதிரி ஆகணும்! அறிமுகமாகும்போதே வில்லங்கமா?

மெட்ரோ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் சிரிஷ். ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் பாபி சிம்ஹா இந்த படத்தின் கதையை கேட்டு வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். சினிமா பின்னணி இல்லாத சிரிஷின் குடும்பமே, அவர் ஐஏஎஸ் படிக்க வேண்டும் என எதிர்பார்த்திருக்க சிரிஷோ ‘எனக்கு நடிப்பு தான் வேண்டும்’ என இந்த துறையை தேர்ந்தெடுத்திருக்கிறார். வெறும் எண்ணத்தோடு மட்டும் அல்லாமல் கலைராணியிடம் நடிப்பு பயிற்சியும், ஜெயந்தி மாஸ்டரிடம் நடன பயிற்சியும், பாண்டியன் மாஸ்டரிடம் சண்டை பயிற்சியும் முறையாக பயின்று முடித்தவருக்கு தேடி வந்த வாய்ப்பு தான் மெட்ரோ படத்தின் ஹீரோ வாய்ப்பு.

வரும்போதே விவகாரமாகதான் என்ட்ரி ஆகியிருக்கிறார் சிரிஷ். எப்படி தெரியுமா? எல்லா அறிமுக ஹீரோக்களிடமும் நீங்க யாராக வரணும்னு ஆசைப்படுறீங்க என்ற கேள்வியை கேட்பார்கள் பத்திரிகையாளர்கள். அவரும், நான் அஜீத் மாதிரி வரணும். விஜய் மாதிரி வரணும். யார் மாதிரியும் இல்ல, நான் நானாதான் இருக்கணும் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் சிரிஷ் வேற மாதிரி.

‘சிம்புவின் தீவிர ஃபேன் நான்’ என்கிறார். ‘தனது உணர்வுகளையும், உண்மைகளையும் வெளிப்படுத்த தயங்காத சிம்புவின் நேர்மை தான் என்னை அவரது தீவிர ரசிகனாக்கியது. கேமராவுக்கு முன் மட்டும் தான் அவர் நடிக்கிறார். அவரை போலவே இருக்க ஆசைப்படுகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

ஹ்ம்ம்ம்… இப்படியும் ஒரு ஹீரோ. ஆச்சர்யமாகதான் இருக்கிறது.

Read previous post:
நான் போலீஸ் இல்ல…போராளி! ஜெயம் ராஜாவின் ஆவேச அப்ரோச்!

ஒரு அசத்தலான போலீஸ் கதையை உருவாக்கியாச்சு. நெட்டுக் குத்தா வளர்ந்து வெட்டுக் குத்துக்கும் பொருந்துற மாதிரி ஆக்ஷன் ஹீரோ கிடைச்சா அலேக்தான்! கண்களை கண்ட இடத்திற்கும் அலைய...

Close