எழுத்தாளர் சுஜாதாவின் மனைவியை ஏமாற்றும் சினிமாக்காரர்கள்? சும்மா விடுமா சுஜாதா ஆவி?

இலக்கிய உலகத்திலும் சினிமா உலகத்திலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர் எழுத்தாளர் சுஜாதா! ஐம்பது வருடங்கள் முன்னோக்கி சிந்திக்கிற ஆற்றல் படைக்கும் எழுத்துக்கள் அவருடையது. விஞ்ஞான சிறுகதைகளின் தந்தை. அவர் எழுத்தெல்லாம் நெஞ்சம் நிறை விந்தை என்று கொண்டாடப்பட்ட சுஜாதா இப்போது நம்முடன் இல்லை. ஆனால் அவர் வடித்த எழுத்துக்கள் யாவும் இன்றியமையா சொத்துகள் இப்போதும் எப்போதும்.

இந்த சொத்துக்களைதான் ஏதோ பர்மா பசாரில் விற்கும் திருட்டு வி.சி.டி போல பாவிக்க ஆரம்பித்திருக்கிறது திரையுலகம். முன்னணியிலிருக்கும் மூன்றெழுத்து சேனல் ஒன்றில் விரைவில் வெளிவரப்போகும் ஒரு தொலைக்காட்சி டெலி பிலிம் சுஜாதாவின் கதைதானாம். முறைப்படி அவரது மனைவியிடம் ஒப்பந்தம் போட்டு வாங்கியதா என்றால்அதை உறுதிப்படுத்த முடியாமல் தடுமாறுகிறார்கள் இங்கே. பிரபல தொலைக்காட்சி நடிகரும் புத்தகம் என்ற படத்தின் இயக்குனருமான விஜய் ஆதிராஜ்தான் இந்த டெலிபிலிமின் தயாரிப்பாளராம். அவர் இந்த கதைக்காக சுஜாதா மனைவியின் ஒப்புதல் பெற்றிருக்கிறாரா? சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இந்த தகவல் தெரியுமா? என்பதெல்லாம் அந்த டெலி பிலிமின் நன்றி கார்டில் இடம் பெறப் போகும் பெயர்களை பார்த்தால் தெரிந்துவிடும். அனுமதி பெற்று அதற்கான சன்மானமும் வழங்கப்பட்டிருந்தால் சபாஷ். ஒருவேளை முறையான அனுமதி இல்லையென்றால் பின் வரும் சாபத்துடன் கூடிய சம்பவம்தான் அரங்கேறும். பீ கேர் புல்…

பீட்சாவை டெலிவரி செய்து அதன் ருசியை தானும் அறிந்து மற்றவர்களுக்கும் சர்வ் பண்ணிய தயாரிப்பாளர் அவர். கடந்த வாரம் எழுத்தாளர் சுஜாதாவின் கதையை படமாக்க முன் வந்தாராம். அவரது மனைவியிடம் பேசி, 10 லட்சத்திற்கான ஒப்பந்தம் போட்டுவிட்டு ஒரு காசோலையையும் கொடுத்துவிட்டு வந்தாராம். ஐயோ கொடுமை. பேங்கிற்கு போனால் பணமில்லை. மனம் வெந்த மிசஸ் சுஜாதா போன் போட்டு புலம்பிவிட்டாராம். “நீங்கள்லாம் நல்லா இருப்பேளா? எங்க ஆத்துக்காரரே ஆவியா வந்து உங்களை நன்னா கேட்கப் போறார் பாருங்கோ” என்றெல்லாம் சினம் கொள்ள, ஆடிப்போனாராம் தயாரிப்பாளர்.

அவர் நோக்கம் ஏமாற்ற வேண்டும் என்பதில்லை. ஏதோ பேங்க்காரர்களின் குழப்பத்தால், சற்று தாமதமாக அக்கவுன்ட்டில் சேர்ந்திருக்கிறது பணம். “அம்மா… கோவிச்சுக்காதீங்க. என்ன நிலவரம்னு பார்த்துட்டு சொல்றேன்” என்றவர், அவசரம் அவசரமாக பேங்க்கை தொடர்பு கொள்ள, அதற்கப்புறம் எல்லா குழப்பங்களும் தீர்த்து வைக்கப்பட்டதாம்.

முறைப்படி போட்ட ஒப்பந்தத்திலேயே இவ்வளவு சாபம். ஒப்பந்தம் போடாமல் திருடினால் வருமய்யா பாவம்!

2 Comments
  1. அந்துவன் மொந்தைக்கள்ளு says

    சும்மா ஓட்டாதேங்காணும். அவா செக் பவுன்ஸ்னு கேஸக போட்டாலே பேக்டரிக்கு சிறைதான். எதுக்கு சாபமெல்லாம் கொடுக்கணும்.

  2. விக்ரமன் & வேதாளம் says

    யோவ் அந்தணா, பொட்ட மாதிரி யாரோ சொன்னத கேட்டு இந்த தகவல போடறியே உனக்கு நெஜமாவே தில் இருந்தா யாரு அந்த 10 லட்சம் ரூபா தயாரிப்பாளர்னு வெளிப்படையா சொல்லு. அவருக்கு மட்டும் பேர சொல்லாம மத்தவங்க பேர மட்டும் வெளிப்படையா சொல்லிருக்க. இதுலேந்தே தெரியலையா நீ எவ்வளவு பெரிய தொடை நடுங்கின்னு, இதுலேந்தே தெரியல நீ சொல்றது எவ்வளவு டுபாகூர் செய்தின்னு………

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
களங்கத்தை துடைத்தாரா லைக்கா அதிபர் அல்லி ராஜா சுபாஸ்கரன்!?

இலங்கையில் ஈழத்தமிழர்கள் படும் இன்னல்கள் கொஞ்சநஞ்சமில்லை. கடந்த 25 வருடங்களாக சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்து எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவதிப்படும் தமிழ்மக்களுக்கு இந்தியா உட்பட உலக...

Close