அட… இந்த காலத்தில் இப்படியும் ஒரு நடிகை!

எதையாவது யாராவது எழுதட்டும். நமக்கென்ன என்கிற போக்கு பெரும்பாலான நடிகர்களுக்கு இருக்கிறது. நடிகைகளுக்கு சொல்லவே வேண்டாம். பாதி பேருக்கு தமிழே தெரியாது. இப்படி சினிமா பாடலாசிரியர்கள் வாழ்வில் எழுதப்படும் வரிகள் எல்லாமும், ரசிகர்கள் விரும்பினால் மட்டுமே காற்றில் ஏறி கவுரவம் சேர்க்கும். ஆனால் அந்த காலத்தில் அப்படியல்ல… சினிமா பாடலாசிரியர்களை கவுரவிக்கும் காலம் இருந்தது. புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு அவர்களில் பலர் அரசியல் ஆலோசகர்களாக கூட இருந்திருக்கிறார்கள். இப்போது அப்படியா? தன் படத்தில் பாடல் எழுதியவர் யாரென்று கூட கேட்பதில்லை ஹீரோக்கள்.

பானையோ, குக்கரோ, ஓட்டையோ, உடைசலோ? தனது சம்பளம் முழுசா வந்துட்டா போதும். படம் ரெண்டு வாரம் ஓடுனா அடுத்ததா இன்னொருத்தர்ட்ட அட்வான்ஸ் வாங்கலாம். இப்படி புற்றீசல் வாழ்க்கை வாழும் பெரும்பாலான ‘தலையெழுத்தே…’ ஹீரோக்களுக்கு பாடலாசிரியர்களை பாராட்ட ஏது நேரம்? இவர்களில் சற்று வித்தியாசமானவராக இருந்திருக்கிறார் ஒரு நடிகை. அதுவும் யாருக்கும் இவர் அவ்வளவு அறிமுகம் கிடையாது. போட்டோவை காட்டினால், ஃபிகர் நல்லாயிருக்கு. எந்த பஸ் ஸ்டாண்டுல நிக்க வச்சு எடுத்தீங்க என்கிற லெவல் அழகுதான். இருந்தாலும் தனது படத்தில் தனக்காக வரிகள் எழுதிய பாடலாசிரியர் அண்ணாமலைக்கு போன் போட்டு இந்த வரி நல்லாயிருந்திச்சு. அந்த வரி சூப்பர் என்று வரி வரியாக பாராட்டியிருக்கிறார்.

அட.. இந்த காலத்தில் இப்படியும் ஒரு நடிகையா? அதுவும் தமிழ் தெரிந்த நடிகையா? ஆச்சர்யம் தாளாமல் விசாரித்தால் அவர் பெயர் சானியா தாராவாம். அங்காளி பங்காளி படத்தின் ஹீரோயின். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கும் இப்படத்தில் ஒரு பாடல் எழுதியிருக்கிறார் அண்ணாமலை. அவருக்குதான் போன் செய்து வரிகளை பாராட்டியிருக்கிறார் சானியா. (நீங்கள்லாம் நல்லா வருவீங்கம்மா…)

இந்த படத்தை மலேசியாவை சேர்ந்த புஸ்பவதி பசுபதி இருவரும் தயாரித்திருக்கிறார்கள். ஏராளமான அநாதை ஆசிரமங்களை தொண்டுள்ளத்தோடு நடத்தி வரும் இவர்கள், அம்மாவும் நீயே… அப்பாவும் நீயே… என்று தமிழ்நாட்டில் வந்து சினிமா எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களை நம்பி வாழும் அத்தனை குழந்தைகளுக்கும் ஆறு வேளை பசியாறுகிற அளவுக்கு அள்ளிக் கொடுக்கட்டும் லாபம்.

அதுவே நமது பிரார்த்தனை மற்றும் வாழ்த்து…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மதுரைக்கே வந்து கூவியும் மனம் இளகாத இளையராஜா… மிரளும் மிஷ்கின்

ஆள்தான் இறுக்கமாக இருப்பாரே ஒழிய, யாரையாவது பாராட்ட வேண்டும் என்று நினைத்துவிட்டால் குழாயை திறந்துவிட்ட மாதிரி கொட்டுவார் மிஷ்கின். அப்படி பலமுறை இளையராஜாவை பற்றி புகழ்ந்து அவரிடமே...

Close