விஜய்சேதுபதியை திணறடித்த யோகி பாபு?
‘யோகி’ படத்தில் அறிமுகமாகும்போது, “இந்தாளு இவ்ளோ பெருசா வளருவாருன்னு நினைச்சுக் கூட பார்க்கலேப்பா” என்று சந்தோஷப்படுகிறது ஒரு கூட்டம்.
தினந்தோறும் ஒரு லட்சம் என்று தன் சம்பளத்தை சந்தோஷ மூடுக்கு மாற்றிவிட்டார் யோகிபாபு. அப்படியிருந்தும் அவர் மீது யாருக்கும் வருத்தம் இல்லை. ஏன்? இந்த அருமை பெருமையை மண்டையில் ஏற்றிக் கொள்வதில்லை அவர். எல்லாருடய குட் புக்கிலும் யோகிபாபுவை ஒட்டி வைக்கிற அளவுக்கு தாழப் பறக்கும் இவருக்கு லேட்டஸ்ட் பாராட்டு கிடைத்திருப்பது விஜய் சேதுபதியிடமிருந்து.
‘ஆண்டவன் கட்டளை’ படப்பிடிப்பில்தான் யோகி பாபுவுடன் நெருங்கி பழகுகிற வாய்ப்பு கிடைத்தது விஜய் சேதுபதிக்கு. காம்பினேஷன் ஷாட்டில் அவ்ளோ பெரிய நடிகரான அவரே சற்று திணறுகிற அளவுக்கு ஸ்கோர் பண்ணுகிறாராம் இந்த பன்னிமூஞ்சிவாயன். ஷாட்டில் இவருக்கு கொடுக்கப்பட்ட வசனத்தை இன்னும் மெருகேற்றி திடீரென வேறு எதையாவது பேசி விடுவாராம். அதற்கு கவுன்ட்டர் கொடுத்தாகணுமே? ஒரு நிமிஷம் ஆடிப்போய்விடுகிற விஜய் சேதுபதி எப்படியோ சமாளித்து ஷாட்டை ரீடேக் இல்லாமல் முடிப்பதே பெரும் சவலாக இருக்கிறதாம்.
“என்னய்யா இந்த மனுஷன்… இப்படி பர்பார்ம் பண்றாரு. அது மட்டுமல்ல, அவருக்கு கவுன்டர் கொடுக்கறதுக்குள்ள நம்ம ஒரு வழி ஆகிடுவோம் போலிருக்கே” என்று ஓப்பனாகவே எல்லார் முன்பும் விஜய் சேதுபதி பாராட்ட, மனசெல்லாம் புல் குளிராகிக்கிடக்கிறார் யோகி பாபு.