சூர்யா படத்திலிருந்து மாறுகிறார் யுவன்!

எங்கு போனாலும் யுவன்சங்கர்ராஜாவை துரத்தும் ஒரே கேள்வி இதுதான். ‘இஸ்லாமுக்கு மாறிட்டீங்க, இன்னும் பழைய பெயர்தான் டைட்டிலில் வருது… ஏன்? ’ சிலர் அவரது ட்விட்டருக்கே வந்து கதவை தட்டி இம்சை பண்ணிக் கொண்டிருக்கிறார்களாம். எல்லாவற்றுக்கும் பொறுமை ஒன்றையே பதிலாக சொல்லி வந்த யுவன் முதன் முறையாக ‘அதுவும் சரிதானே?’ என்று எண்ண ஆரம்பித்திருக்கிறார்.

முன்பெல்லாம் வத வத என இசையமைத்து வந்த வழக்கத்திற்கும் விடுதலை கொடுத்துவிட்டார். மிக மிக செலக்டிவ்வாக இசையமைப்பது. சற்றே பரவலான நோக்கத்தோடு பாலிவுட், ஹாலிவுட் என்று யோசிப்பது… இவையெல்லாம்தான் யுவனின் தற்போதைய சிந்தனை. இந்த நேரத்தில் பெயர் மாற்றமும் பெரிதாக கை கொடுக்கும் என்பது அவரது நம்பிக்கையாக இருக்கிறதாம்.

முதல் கட்டமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘மாஸ்’ படத்தின் டைட்டிலில் தனது பெயரை மாற்றவிருக்கிறார் யுவன். அவரது இஸ்லாமிய பெயர்தான் டைட்டிலில் வரப்போகிறதாம். யாராவது பழைய வாசனையை நுகர்ந்து, ‘மியூசிக் யுவன் ஸ்டைலிலேயே இருக்குப்பா…’ என்று பாராட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

Read previous post:
கத்தி தயாரிப்பாளர் சுபாஷ்கரணுக்கே மொட்டை? கறைபட்ட ஐங்கரன் கருணா!

காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் உளுந்தம் வடை என்று ஹாயாக வாழ்ந்து வருபவர் சுபாஷ்கரண் அல்லிராஜா! பத்து கோடி பணமா இருந்தாலும் அவருக்கு அது ஒத்த...

Close