அப்பா, சகோதரர் கூட இல்லாமல் யுவன்சங்கர் ராஜா திருமணம்! இன்று கீழக்கரையில் ரகசியமாக நடந்தது?

இஸ்லாமியராக மாறிய யுவன் சங்கர் ராஜா அதற்கப்புறம் இஸ்லாமிய நெறிகளை மிக மிக சிரத்தையுடனும் பக்தியுடனும் கடைபிடித்து அதன் வழி நடந்து வருகிறார். தன் பெயரை அப்துல் ஹாலிக் என்றும் மாற்றிக் கொண்டிருக்கிறார். இவருக்கும் மலேசியாவை சேர்ந்த ஜப்ஃரோன்னிசாவுக்கும் திருமணம் செய்வதாய் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் திருமண தேதி எப்போது என்கிற தகவல்கள் எல்லாம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் திடீரென தனது திருமணத்தை நடத்த முடிவு செய்த யுவன், அதையும் கீழக்கரையில் மணமகள் வீட்டிலேயே நடத்திவிட தீர்மானித்தார். நேற்று வரைக்கும் கூட இந்த தகவலை யாருக்கும் அவர் சொல்லவில்லையாம். திடீரென இன்று அவருக்கு திருமணம் நடப்பதை அரசல் புரசலாக கேள்விப்பட்ட அவரது நண்பர்கள் யுவன் நமக்கு கூட சொல்லலையே என்று அதிர்ச்சியாகியிருப்பதாக தகவல். அதுமட்டுமல்ல, இந்த திருமணம் கீழக்கரையில் நடந்தாலும் அங்கும் வெகு விமரிசையாக நடைபெறாமல் மிக மிக எளிமையாகவும் ரகசியமாகவும் நடந்திருக்கிறது.

அதிர்ச்சி அதோடு நிற்கவில்லை. சென்னையிலிருக்கும் அவரது தகப்பனார் இசைஞானி இளையராஜாவுக்கும், இந்த திருமணத்திற்கு ஆரம்பத்திலிருந்தே சப்போர்ட்டாக இருக்கும் அவரது சகோதரர் கார்த்திக்ராஜாவுக்கும் கூட கூறவில்லையாம் யுவன்.

1 Comment
  1. Jessy says

    எந்த நம்பிக்கையில இவனுக்கெல்லாம் பொண்ணு குடுக்கறாங்க…???

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
என்னை அறிந்தால் பொங்கலுக்கு இல்லை! ஜனவரி 29 ந் தேதிதான் ரிலீஸ்

‘என்னை அறிந்தால்’ படப்பிடிப்பு சமயத்தில் அஜீத்திற்கும், டைரக்டர் கவுதம் மேனனுக்கும் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக ஐந்து நாட்கள் அஜீத் படப்பிடிப்புக்கு வரவில்லை என்கிற தகவலை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்....

Close