சீன் காட்டிய பேய்! இதெல்லாம் சினிமா பிரமோஷன்ல வழக்கமில்லீங்க?

சட்டைய அவுத்துட்டா சொறி சிரங்கு படைதான்! ஆனால் அதன் மேல் ஒரு ஜிகினா சட்டையை போட்டு ஏமாற்றுவதில் சினிமாக்காரர்களுக்கு இணை அவர்களேதான்! டீசர் வெளியீடு, ட்ரெய்லர் வெளியீடு, பாடல் வெளியீடு, அதற்கப்புறம்தான் படமே வெளியீடு என்று இன்சால்மென்ட்டில் ரசிகர்களை வளைத்துப் போடுகிற வழக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதில், “என் படத்தில் வர்ற சீன்களில் கொஞ்சம் காட்றேன். புடிச்சிருந்தா லைக் பண்ணுங்க” என்கிற தெம்பு, எல்லா பட இயக்குனருக்கும் வருவதில்லை.

“கணுக்கால பார்த்துட்டு வெள்ளையா இருக்கேன்னு ஏமாந்துட்டேன். ஆனால் முகத்தை பார்த்தால் மூணு நாளு சாப்பிட முடியாது போலிருக்கே?” என்று அலுத்துக் கொள்கிற அளவுக்கு டீசரும், அதற்கான படமும் வந்து சேர்கிற காலத்தில், சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு தன் படத்தில் வரும் காட்சிகளை திரையிட்டு, பிரமூட்டினார் ஜீரோ பட இயக்குனர் ஷிவ் மோகா. அஷ்வின், ஷிவ்தா ஹீரோ ஹீரோயினாக நடித்திருக்கிறார்கள். நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த இயக்குனர் மகேந்திரன், மனுஷன் வாழ்க்கை ஜீரோவுல ஆரம்பிச்சு ஜீரோவுலதான் முடியுது என்று ஜீரோவை தொடர்பு படுத்தி ஒரு விஷயத்தை சொன்னதுடன், இப்பல்லாம் எங்க நல்ல படம் வருது? என்று அலுத்துக் கொண்டார். ஆமா… ஜீரோ என்ன மாதிரியான படம்? தமிழ்சினிமாவில் சமீபகாலமாக கல்லா கட்டி வரும் ஆவி பேய் பிசாசு பில்லி சூனிய வகைதான்.

மனைவிக்கு பிடித்த பேயை அவளிடமிருந்து விரட்டுகிற வேலைதான் ஹீரோவுக்கு! ஆக மொத்தம், இந்த ஹீரோ ஜீரோ இல்ல!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எந்த கட்சிக்கும் ஓட்டு இல்லை! அஜீத் எடுத்த திடீர் முடிவு?

அரசியல் ஒரு கோவில் என்றால், ஆளுக்கொரு திசையில் திருப்பிக் கொண்டு நிற்கும் நவக்கிரஹங்கள் வேறு யாருமல்ல, கட்சிகள்தான். தேர்தலுக்கு தேர்தல் ஆதாயம் பார்க்கும் கட்சிகளே இப்படியென்றால், நமக்காக...

Close