ராக்கெட் ட்ரீ விமர்சனம்

இந்தியாவின் ‘ஞானம்’ விண்ணை முட்டிக் கொண்டு பறந்தாலும், இந்தியாவின் ‘மானம்’ மண்ணை பிளந்து கொண்டு கீழே போய் விட்டது. அறிவாளிகளின் உச்சி முடியை, பற்றி இழுக்கும் அயோக்யத்தனம் எல்லா துறைகளிலும் இருக்கிறது, இருந்திருக்கிறது, இருக்கும் என்பதன் சுருக் சுருக் பதிவுதான் இந்த ராக்கெட் ட்ரீ. நாடெங்கும் இருக்கும் நம்பி நாராயணன்கள் இனிமேலாவது காப்பாற்றப்படட்டும். (ஆமா…. இந்த மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை கதையையும் யாராவது படமாக்கலாம்ல?) இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் இந்திய ராக்கெட் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு […]

எல்லாம் சரியா வரும்ணே! -காபி வித் காதலுடன் கெக்கேபிக்கே சிரிப்பு

வாட்டியெடுக்கும் ஊட்டிக்குளிர் தமிழ் சினிமா சென்ட்டிமென்ட்டுகளில் ஒன்று. பாலுமகேந்திராவுக்கெல்லாம் பேவரைட் பிளேஸ் ஒன்று உண்டென்றால் அது ஊட்டிதான். விஷுவல் பியூட்டிக்காகவும், வேலை நேர டென்ஷனை குறைக்கவும் ஊட்டியை தேர்ந்தெடுக்கும் சினிமா இயக்குனர்கள் குறைவென்றாலும் அதுவே சினிமாவுக்கு நிறைவு. ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தை ஊட்டியில் எடுத்த சுந்தர்சி, பல வருடங்களுக்கு பின் ‘காபி வித் காதல்’ படத்தை ஊட்டியில் எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்தப்படமே ஆஹா ஓஹோ ஹிட்டாச்சே? அப்ப இந்தப்படம்? இப்படி சென்ட்டிமென்ட்டால் துளைத்தாலும், படம் ஃபுல் காமடி […]

சேத்துமான் –விமர்சனம்

‘பன்னி’ துணிக கருமம். உணவு அரசியலை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கும் நாட்டில், போகிற போக்கில் செருப்படி என்பது இதுதான் போலிருக்கிறது. மாட்டுக்கறிக்கா ஆசைப்பட்டீங்க? என்று பட்டியலின குடியிருப்பை சூறையாடும் ஒரு கிராமத்தில், அதே ஊர் ஆதிக்க சாதிக்காரன் ஒருவன் பன்றிக் கறிக்காக அலைவதுதான் படம். நேர்த்தியும், நிதானமுமாக கதை நகர நகர ஒரு கட்டத்தில், இது படம் என்பதையும் தாண்டி அந்த ஊருக்குள் இறங்கிவிடுகிறது மனசு. புல், பூண்டு, பொட்டல் வெளியெல்லாம் கூட நடித்திருக்கிறது. முக்கியமாக அந்த […]

விக்ரம் விமர்சனம்

கோட்டை முனி கொட்டாவி விட்டது போலாகிவிடுகின்றன சில பிரமாண்டங்கள். ஏதோ ஜானர், ஸ்பேனர் என்றெல்லாம் சொல்லி, ‘படம் பார்ப்பது எப்படி?’ என்று கிளாஸ் எடுக்கிறார்கள் பதினெட்டுகள். இந்த பரிதாப யுகத்தில், கண்ணுக்கு தெரியாத தொலைவில் நின்று கொண்டு கதறக்கூட தெம்பில்லாமல் தவிக்கிறார்கள் அவ்வை சண்முகிகளும், பரியேறும் பெருமாள்களும். தேர்ந்த திரைக்கதைகள் தேவையில்லாத ஊரில், துப்பாக்கி ரவைகளை முழுங்கிவிட்டு காட்டுக் கூச்சலிடுகிறான் விக்ரம். ஹ்ம்ம்ம்… இது அன்பறிவ், திலிப் சுப்பராயன்களின் காலம். ஆங்காங்கே தென்படுகிற சம்பவங்களை அடர்த்தியாக அடுக்கி […]

பீஸ்ட் விமர்சனம்

ஆகாயத்தையே அரை டவலால் மூடிவிடுகிற அசகாய சூரர்கள் சினிமாவில் பெருகிவிட்டார்கள். கற்பனைக்கும் எட்டாத சம்பவங்களை கதைக்குள் போட்டுக் குலுக்கி, கண்மூடித் தனமாக வதக்கி, பல கோடி ரூபாய்களை போட்டுப் பொசுக்கி, கடைசியில் ஒரு வஸ்துவை கமர்ஷியல் கிளாசில் ஊற்றிக் கொடுப்பார்கள். தீர்த்தம் என்று நினைத்தால் தீர்த்தம். தீர்ந்தோம் என்று நினைத்தால் தீர்ந்தோம். அப்படியொரு ரெண்டும் கெட்டான் படம்தான் பீஸ்ட்! “விஜய்யின் அழகென்ன, ஃபைட்டென்ன, ஸ்டைலென்ன, டான்சென்ன?” என்று சந்தோஷக் கூச்சலிடுபவர்களும், ‘நெல்சன் தளபதிய பழிவாங்கிட்டான்யா…’ என்று கதற […]

குதிரைவால் – விமர்சனம்

‘எக்ஸ்பயரி‘மென்ட்டல்‘ மூவி’ என்று ஒற்றை வரியில் விமர்சனத்தை முடித்துவிடலாம். ஆனால் தூக்கி போட்டு துவைத்தவர்களை சும்மா விடுவதா என்கிற கோபம் வந்து தொலைக்கிறதே, என்ன செய்ய? மண்டைக்கு வெளியே மாவுக்கட்டு போடுகிற கும்பல் சினிமாவுக்கு வெளியேதான் இருக்கிறது, அதுவும் இலக்கிய உலகத்தில் என்று நம்பிக் கிடந்த நமக்கு, பேரெச்சரிக்கைதான் இந்தப் படம். இந்த ஜோல்னா பை சோல்ஜர்களிடம் சிக்கி சீரழிந்த அத்தனை பேரும் அரை மவுனத்தோடு தியேட்டரை விட்டு வெளியே வருகிறார்கள். சில அறிவாத்மாக்கள் மட்டும், ஆஸம்… […]

ரொம்ப பயந்துட்டியா கொமாரு? சைக்கிளோடு ஒரு பல்டி

‘ஒத்த வெரல காட்டுனா போதும், மொத்த தமிழ்நாடும் சரண்டர்…‘ அப்படியொரு நண்பா நண்பிகள் கூட்டத்தோடு இருக்கிறார் விஜய். ஆனால் டெல்லியிலிருக்கிற அந்த ஒற்றை பாகன் இந்த மொத்த யானைக்கூட்டத்தையும் சிதற விடுறானே, என்ன பண்றது? (என்ன பண்றது? இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்ட் அவங்களுதாச்சே?) நேற்று நடந்த தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலும், அங்கு வாக்களிக்க வந்த விஜய்யின் அலப்பறையும் ஆல் இண்டியா அனலைஸ் ஆகிவிட்டதுதான் ஹைலைட். வழக்கமாக தன் படகு காரில் வந்திறங்காமல், கருப்பு சிவப்பு கலரில் வடிவமைக்கப்பட்ட [...]

வலிமை அப்டேட் தேதி! மீண்டும் தவறு செய்கிறார்களா?

விட்டால் ஐ.நா சபைக்கே கூட ஒரு மனுவை தட்டி விட்டிருந்தாலும் ஆச்சர்யமில்லை. அந்தளவுக்கு “வலிமை அப்டேட் சொல்லுங்க“ என்று சமுதாயத்தின் எல்லா மட்டங்களில் இருப்பவர்களையும் வளைத்து மறித்து படுத்தி எடுத்துவிட்டார்கள் அஜீத் ரசிகர்கள். ஆளு வச்சு அசிங்கப்படுத்துறாங்களோ? என்று தனது போட்டி ஹீரோவை அஜீத் தரப்பே சந்தேகப்படுகிற அளவுக்கு போனது இந்த தொந்தரவு. கொஞ்ச நேரம் சும்மாயிருங்களேன்ப்பா… என்ற எரிச்சலை, பல்வேறு வார்த்தைகளில் சொல்லி பதப்படுத்தி வந்த அஜீத்தின் தரப்பு, ஒரு கட்டத்தில் வாய்விட்டு அறிவிப்பு கொடுக்கிற [...]

கதவ தட்றது பாண்டிய மன்னனாகவும் இருக்கலாம்

ஓவரா நடிச்சா சிவாஜி, ஒலக்கையேன்னு நடிச்சா பவர் ஸ்டாரு… இப்படிதான் நடிகர்களை எடை போட்டு வைத்திருக்கிறது இன்டஸ்ட்ரி. நகைக் கடை தராசு மாதிரி துல்லிய நடிப்பும், வல்லிய நுணுக்கமும் கொண்ட நடிகர்களைதான் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். டாப் டென் ஹீரோக்கள் வரிசை சுருங்கி விரிந்து சூட்சுமம் காட்டிக் கொண்டிருக்கிற நேரத்தில், படக்கென்று உள்ளே வந்து சடக்கென்று சப்பணம் போட்டு உட்கார்ந்துவிட்டார் எஸ்.ஜே.சூர்யா. நெஞ்சம் மறப்பதில்லை படம் காப்பாற்றப்பட்டதற்கு ஒரே காரணம், எஸ்.ஜே.சூர்யாதான். பின்னாலேயே வரப்போகிற மாநாடு, [...]

அலைபாயும் மண் சோறு  

தேவையில்லாத ஆணி பஞ்சர் கடைக்காரனுக்கு உதவினாலும் உதவும். தேவையில்லாத ஆட்களின் அரசியல் கனவு, தம்படிக்கு பிரயோஜனமில்லை. ‘ஒரு நபர்‘ கட்சிகளின் அட்ராசிடி, மற்ற மாநிலங்களில் எப்படியோ… தமிழகத்தில் மட்டும் தாராளம் ஏராளம். நாலு மாசத்துக்கு முன்பு வரை யாரென்றே அறியப்படாத அர்ஜுன மூர்த்தி ரஜினியின் ஒரு ஐந்து நிமிஷ பிரஸ்மீட்டுக்கு பின்பு இன்று ஒரு கட்சிக்கே தலைவர். இப்படி நாலு பேருக்கு தெரிஞ்சா போதும், நமக்கும் பால் டிகாஷன் கலக்கத் தெரியும் என்று டீக்கடை ஆரம்பிக்கிற நபர்களை […]

சூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்பதற்கான 4 காரணங்கள்

அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? உங்கள் ஆர்வத்தைப் பேரார்வமாக்க இதோ நான்கு காரணங்கள் இந்த நான்கு காரணங்கள், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று படத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்க வைக்கிறது. ஒவ்வொரு புது அறிவிப்பின் மூலம் அமேசான் ப்ரைம் வீடியோவின் அடுத்த திரைப்படமான சூரரைப் போற்று ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டி வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும், சுவாரசியங்கள் நிறைந்த இந்தத் திரைப்படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். உண்மை சம்பவங்களின் […]