கிருமி… இன்னொரு காக்காமுட்டை! மஹா ஜனங்களே, வெயிட் பண்ணுங்க!

‘ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ பற்றிய கதைதான் கிருமி. இந்த படத்தின் திரைக்கதை ‘காக்கா முட்டை’ மணிகண்டன் என்றால், சடக்கென ஒரு ஸ்டெப் படத்தை மேலே உயர்த்தி வைத்துவீர்கள்தானே? எவ்வித சினிமா சமரசமும் இன்றி இந்த படத்தை இயக்கியிருக்கிறார் அனுசரண். ‘மதயானைக்கூட்டம்’ கதிர் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ரேஷ்மிமேனன். அண்மைகாலத்தில் தமிழ்சினிமாவை புரட்டிப் போட்ட படம் ‘காக்காமுட்டை’ என்றால், அதற்கு சற்றும் குறைவில்லாத கம்பீரத்துடன் வரப்போகும் படம் ‘கிருமி’ என்று சொல்லிவிடலாம் போலிருக்கிறது. ஏனென்றால் நாம் பார்த்த ட்ரெய்லரும், ஒரு பாடல் காட்சியும் அப்படி! அதைவிட தாண்டி நின்ற அனுசரணிண் கான்பிடன்ட்டையும் இந்த இடத்தில் கூடுதலாக சேர்த்துக் கொள்வது நல்லது.

ஒரு அறிமுக இயக்குனருக்கு படம் கிடைப்பதே குதிரைக் கொம்பு. அதிலும் அவருக்காக தரப்பட்ட ஹீரோவை பார்த்து, இவரை வச்சு படம் பண்ணலாமா? வேணாமா? இல்ல ஸாரின்னு கிளம்பிடலாமா ? என்று அதே அறிமுக இயக்குனர் நினைத்தால், அங்குதான் நிற்கிறது அவரது கெத்து! மதயானை கூட்டம் படத்தை அதற்கப்புறம்தான் பார்த்தாராம். பையன் ஓ.கே. இருந்தாலும், வெளிநாட்டில் இருக்கும் தன் அம்மா அப்பாவை கேட்டுவிடுவோம் என்று அவர்களுக்கு போன் அடித்தாராம். “அந்த பையன் ஓ.கேவான்னு நீங்க பார்த்துட்டு சொல்லுங்க. அப்புறம் நான் முடிவெடுக்கிறேன்” என்று இங்கிருந்து அனுசரண் சொல்ல, அவசரம் அவசரமாக மதயானை கூட்டம் படத்தை டவுன்லோடு செய்து பார்த்தார்களாம் அவர்கள். அதற்கப்புறம் அவர்கள் பச்சைக்கொடி காண்பித்து, இதோ இந்த ஸ்டேஜ் வரைக்கும் வந்துவிட்டது படம்.

விரைவில் ஏதோவொரு நாட்டில் நடைபெறும் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் திரையிடப்போகிறார்கள் கிருமியை. அதுவும் இந்தியாவிலிருந்து திரையிடப்படுகிற முதல் படமே இதுதானாம் அந்த பெஸ்டிவெலில்! அதுபற்றிய விபரங்களை அறிவிப்பு வரட்டும். அப்புறம் சொல்கிறேன் என்றார் அனுசரண்.

சில வாரங்களுக்கு முன்பே படத்தை பார்த்துவிட்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், “இந்த படத்தின் தயாரிப்பாளர் ரஜினி ஜெயராம் என்னை வற்புறுத்தி கூப்பிட்டதால் போனேன். பாதியில் வந்துடலாம்னுதான் போனேன். ஆனால் என்னையறியாமல் முழு படத்தையும் பார்த்தேன். அவ்வளவு பிரமாதமான படம். உடனே இந்த படத்தின் இயக்குனர், ஹீரோ, ஒளிப்பதிவாளர்னு எல்லாரையும் கூப்பிட்டு எனக்கொரு படம் பண்ணித்தரும்படி கேட்டேன். ஆனால் யாரும் பதில் சொல்லல” என்றார்.

நாமதான் ஏற்கனவே சொன்னோம்ல… டைரக்டர் ரொம்ப வெவரமான ஆளுன்னு!

anu sarankakkamuttaikirumiManikandanNational AwardSlide
Comments (0)
Add Comment