புரளியில் இருந்து வந்ததா ஃபேஸ்புக்? கிசுகிசுக்க வைக்கும் கெழவி ஆன்ந்தம்.

எத்தனையோ ஆன்ந்தம் இதுவரை வெளியாகி உள்ளது. எல்லா ஊர்க்காரங்களும் அவங்க அவங்க ஊர் புகழ் பாடி ஆன்ந்தம் உருவாக்கி ஆன்ட்ராய்டிலும்ஐபோனிலும் வெளியிடும் காலம் இது. இதோ அந்த ஆன்ந்தம் வகையறா வரிசையில் அதிரடியாக வந்து சேர்ந்திருக்கிறது, கெழவி ஆன்ந்தம்.

மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள மார்த்தாண்ட சக்கரவர்த்தி காமெடி வெப் சீரிஸ்க்காக இந்த கெழவிஆன்ந்தம் உருவாக்கியுள்ளனர். பிரபு ஜெயராம் இயக்கத்தில் இஷான் தேவ் இசையில் இந்த பாடல் உருவாகியுள்ளது. பாடலை முருகன் மந்திரம் மற்றும்ராஜேஷ் எழுதியுள்ளனர். பிரேம்ஜி பாடியுள்ளார். கார்த்திக் கிருஷ்ணா ஒளிப்பதிவில் அருண்கிருஷ்ணா எடிட் செய்துள்ளார்.

மார்த்தாண்ட சக்கரவர்த்தி வெப் சீரிஸ் பார்ப்போரை எல்லாம் இடைவெளி இல்லாமல் சிரிக்க வைத்துக்கொண்டிருக்க, சீரிஸ்-ன் ஸ்பெஷலாக இருக்கும்இந்த கெழவி ஆன்ந்தம் தனியாக வெளியிடப்பட்டுள்ளது. நம்மூர் கெழவிகளுக்கும் ஃபேஸ்புக்குக்கும் என்ன சம்பந்தம்… இந்த கிசுகிசுவுக்கு விடைதெரியணும்னா உடனே பாருங்க, “கெழவி ஆன்ந்தம்”.

https://youtu.be/hTuSyqESi1g

Marthanda Chakravarthy presents KEZHAVI ANTHEM
Comments (0)
Add Comment