இனி தியேட்டர்களில் ஷார்ட் பிலிம் பார்க்கலாம்… கார்த்திக் சுப்புராஜின் அடுத்த ஸ்டெப்!

‘குறும்படம் எடுக்கிற குரங்குகளா’ என்று இனிமேல் யாராவது திட்டினால், ‘அட போய்யா… ’ என்று அலட்சியம் காட்டுகிற காலம் இது. அந்த அலட்சியத்தில் மேலும் கொஞ்சம் கெட்டி சிமென்ட்டை கரைத்து ஊற்றி கருத்துக்கு வலு சேர்த்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஒரு குறும்பட இயக்குனராக அறிமுகம் ஆகி, தமிழ்சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக போற்றப்படுகிற இடத்திலிருக்கிறது கார்த்தி சுப்புராஜின் அந்தஸ்து. அவர் இயக்கிய பீட்ஸா, ஜிகிர்தண்டா ஆகிய இரு படங்களுமே செம ஹிட். கார்த்திக்கின் வரவுக்கு பிறகு தமிழ்சினிமா குறும்பட இயக்குனர்களால் நிரம்பிவிட்டது. இந்த நேரத்தில், சம்பந்தப்பட்ட ஷார்ட் பிலிம் ஏரியாவை இன்னும் கவுரவப்படுத்தப் போகிறாராம் அவர். எப்படி?

‘ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்’ என்ற புதுப்பட நிறுவனத்தை துவங்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். எந்த ஷார்ட் பிலிமும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுவதில்லை. அந்த வழக்கத்தை ஒழிக்கப் போகிறாராம் இவர். இனிமேல் பெரிய தியேட்டர்களில் நல்ல நல்ல ஷார்ட் பிலிம்களை திரையிடுவது இந்த நிறுவனத்தின் முதல் நோக்கம். பிறகு நல்ல கதையோடு வருகிறவர்களை குறும்படம் இயக்க வைப்பது. நல்ல இயக்குனர்களை தேடி அவர்களுக்கு பட வாய்ப்பு அளிப்பது என்று தன்னைப் போலவே தன் திட்டத்தையும் அகலப்படுத்தப் போகிறாராம் கார்த்திக் சுப்புராஜ்.

மதுபானக்கடை, வாயை மூடி பேசவும், விழா போன்ற படங்களை இயக்கிய முன்னாள் குறும்பட இயக்குனர்கள் பலர் விழாவில் கலந்து கொள்ள, பாலாஜி சக்திவேல், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா போன்ற பிரபல இயக்குனர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

‘நான் எடுத்த முதல் இரண்டு படங்களையும் ஹிட் பண்ணிட்டு மூணாவது படமான ‘நிறம் மாறாத பூக்கள்’ எடுப்பது சம்பந்தமா தயாரிப்பாளரிடம் பேச போனேன். எவ்வளவு சம்பளம் கேட்பதுன்னு குழப்பம். பத்தாயிரம் கேட்கலாமா? பதினைஞ்சாயிரம் கேட்கலாமான்னு தயக்கம். பதினைஞ்சு கேட்டு வேணாம்னு அனுப்பிட்டா என்ன செய்யறதுன்னு பயம். இருந்தாலும் திக்கி திணறி கேட்டுட்டேன். பதினைஞ்சாயிரத்துக்கு தயாரிப்பாளர் ஒத்துக்கிட்டாலும், அசிஸ்டென்ட் சம்பளத்தை அதிலேர்ந்து கொடுக்கணும்னு சொல்லிட்டார். பேசி முடிச்சுட்டு திரும்புனா, பாக்யராஜ் கோவப்படுறான். போங்க சார். இவ்வளவு கம்மி சம்பளத்துக்கு ஏன் ஒத்துக்குட்டீங்க? இருங்க நான் போய் பேசறேன்னு கிளம்பி போயிட்டான். வாய்ப்பை கெடுத்துருவானோன்னு எனக்கு பயம். ஆனால் போய் எப்படியோ பேசி பதினைந்தாயிரம் சம்பளத்தை முப்பதாயிரமா பேசிட்டு வந்துட்டான். அப்பவும் சரி. இப்பவும் சரி. எனக்கு சம்பளத்தை பற்றி பேசவே தெரியாது. ஆனால் இப்ப வர்ற பசங்க அப்படியில்ல. நல்ல தெளிவா இருக்காங்க. இப்படிதான் இருக்கணும்’ என்று கார்த்தி சுப்புராஜை வாழ்த்தினார் டைரக்டர் பாரதிராஜா.

balaji sakthivelbharathirajakarthick subburajs.j.suryaSlideStone Bench Creations
Comments (0)
Add Comment