வை ராஜா வை… படத்தில் ஒரு ரகசியம்! நல்லா வையுங்க ராஜா வையுங்க?

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருக்கும் வை ராஜா வை படம் மே 1 ந் தேதி வெளியாகிறது. இந்த நிமிஷம் வரைக்கும் ஒரு ரகசியத்தை காத்து வருகிறார் ஐஸ்வர்யா. ‘ப்பூ… இது என்ன அவ்ளோ பெரிய ரகசியமா?’ என்று படித்த பிறகுதானே சிரிக்க முடியும்? இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றுகிறாராம் எஸ்.ஜே.சூர்யா. நரி இடப்பக்கம் போனாலென்ன, வலப்பக்கம் போனாலென்ன? மேல விழுந்து புடுங்கறது நிச்சயம் என்கிற அளவில்தான் இருக்கிறது அவரது தரிசனம். நிலைமை இப்படியிருக்க, ரசிகர்கள் அல்லோகலப்படுவார்கள் என்று நினைத்த ஐஸ்வர்யாவை நினைத்தால் ஐயோ பாவமாகதான் இருக்கிறது. இது குறித்து ரசிகர்கள் புலம்பினாலும் ஆச்சர்யமில்லை. இருந்தாலும், இந்த படத்தில் இன்னொரு விசேஷம்.

அது? தனுஷும் ஒரு பாடலுக்கு ஆடுகிறாராம்.

இவ்விரண்டு விஷயத்தையுமே சைலன்ட்டாக வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா. ஆனால் தனுஷ் ஆடுகிறார் என்கிற விஷயம் மட்டும் எப்படியோ கசிந்துவிட்டது. கடைசியில் மிஞ்சியது எஸ்.ஜே.சூர்யா ரகசியம்தான்.

சற்றே ஓவர் டோஸ் பார்ட்டியான எஸ்.ஜே.சூர்யாவால், வை ராஜா வை… வையுங்க ராஜா வையுங்க… என்று ஆகாமலிருந்தால் சரி. (வட்டார வழக்கு சொல்படி வையுங்க என்றால், திட்டுங்கள் என்று அர்த்தம். #எல்லாம் ஒரு விளக்கத்துக்குதான்)

agsaishwarya dhanushdhanushpriya anandSJSuryaSlide
Comments (1)
Add Comment
  • Justin

    ரஜினி மகள் என்பதால் என்னவெல்லாம் பேசுவதா ? கமல் மகள் அவுத்து போட்டு ஆடுகிறாள். போய் பாருடா மவனே

    ALL THE BEST SMT. AISHWARYA DHANUSH