தல58 என்று சொன்னால் அமிதாப்பச்சனுக்கு புரியுமா? லெக்பீசை புளி சாதத்துல செருகிட்டீங்களேப்பா!
ஜாதக விஷயத்தில் பரம்பரை பரம்பரையாக வரும் ‘பட்டை, நாம’ ஜோதிடர்களை கூட கதி கலங்க வைக்கிற அளவுக்கு ஜோதிட ஞானம் படைத்தவர் அஜீத்! ஒன்பதுல சுக்கிரன் இருந்தா அப்படி. பத்துல செவ்வாய் இருந்தா இப்படி என்று பார்த்த மாத்திரத்தில் புட்டு புட்டு வைக்கிற ஆள். வீட்டு ஜன்னலை சார்த்த திறக்க கூட ஜாதகத்தை ஆராய்கிற அளவுக்கு அவரே முழுமையாக அதை நம்புவதால் எடுத்து வைக்கிற எல்லா ஸ்டெப்பும் அந்த 12 கட்டங்களுக்கு அடங்கிதான்!
எங்கேயோ கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஏ.எம்.ரத்னத்தை அழைத்து வரச் சொன்னதும், அந்த ஜாதக கட்டம்தானே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. அதற்கப்புறம் கட்டங்கள் சொன்னபடி, ரத்னமும் இவரும் பிரிய வேண்டிய காலத்தில் கரெக்டராக அவரை கழற்றிவிட்டார் அஜீத். எப்போதும் எல்லா வகையிலும் ஜோதிட ஆட்சிக்கு கீழே அடிபணியும் ஒரு சாதாரண பிரஜையாகதான் இருந்தார் அஜீத். அதன்படிதான் அவர் அமிதாப்புக்கு கால்ஷீட் கொடுத்து அவரது ஏ.பி.சி. பிலிம் கார்ப்பரேஷனை மீண்டும் தூசு தட்ட நினைத்த விஷயமும். இந்த விஷயம் பேச்சு வார்த்தையில் இருக்கும் போதே வெளியே கசிந்ததால்தான் பெரும் பரபரப்பு.
இதற்கிடையில் அமிதாப்பிடம் ட்விட்டரில் கேள்வி கேட்டிருக்கிறார் ஒரு அஜீத் ரசிகர். அதில் “தல 58 படத்தை நீங்க தயாரிக்கிறீங்களா?” என்று கேட்க, படக்கென பதில் சொல்லியிருக்கிறார் அந்த வளர்ந்த மனிதர். என்னவென்று? “நோ…” இதுதான் அமிதாப்பின் பதில்.
அட… அண்ணனுங்களா? ஒங்கள மாதிரி ரசிகர்களுக்குதான்யா அவர் தல. அமிதாப் மாதிரியான இந்திய சூப்பர் ஸ்டார்களுக்கு அவர் அஜீத் கூட அல்ல. மிஸ்டர் அஜீத்குமார். அவ்வளவுதான். அவரிடம் போய், தல58 என்றால், சிக்கன் 65 லெவலுக்குதான் யோசித்திருப்பார்.
நல்லா ஒரு முறை புரியுற மாதிரி கேளுங்கப்பா…!
சரி சரி நம்புகிறோம் .
அது சரி அமிதாப் thala58 என்று எதை நம்பி இல்லை என்று சொன்னார் என்று ஒருக்கா கேட்டு சொல்லுங்கோவன் பிலீஸ்
Thala57 இக்கு இன்னும் செகண்ட் ஹீரோயின் யாரு வில்லன் யாரு தெரியல இதில okay okay
ம்ம் ஈஸியா நம்பத்தான் முடியுது இல்லை.